Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.33 கோடி செலவில் கோயம்பேடு மார்க்கெட் ரோடு அகலப்படுத்தப்படுகிறது: மழைநீர் வடிகாலும் சீரமைப்பு

Print PDF

மாலை மலர் 04.09.2010

ரூ.33 கோடி செலவில் கோயம்பேடு மார்க்கெட் ரோடு அகலப்படுத்தப்படுகிறது: மழைநீர் வடிகாலும் சீரமைப்பு

ரூ.33 கோடி செலவில்
 
 கோயம்பேடு மார்க்கெட் ரோடு
 
 அகலப்படுத்தப்படுகிறது:
 
 மழைநீர் வடிகாலும் சீரமைப்பு

சென்னை, செப். 4- சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் வடிகால் தூர்ந்து குப்பைகள் அடைந்து கிடப்பதால் வடிகால் வசதியின்றி தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் உள்ளது.

இதுபோல் ரோடுகளும் குண்டும்- குழியுமாக உள்ளது. இவற்றை அவ்வப்போது சரி செய்தாலும் மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடுகிறது.

இதனால் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு சிரமப்பட்டு செல்ல வேண்டி உள்ளது. தினமும் சுமார் 1 லட்சம் மக்கள் மார்க்கெட்டுக்கு வந்து செல்வதால் அடிப் படை வசதியின்மை குறித்து பலர் அரசுக்கு புகார் செய்தனர்.

இது பற்றி ஆலோசனை நடத்திய அதிகாரிகள் மார்க்கெட்டில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நவீன மழைநீர் வடிகால் அமைக் கவும், ரோடுகளை புதுப்பிக் கவும் மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கினர்.

அடிப்படை வசதி மேம்பாட்டு குழு உருவாக்கி ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு ரூ.33 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்யவும் சி.எம்.டி..வுக்கு குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த பணம் மார்க்கெட் கமிட்டிக்கு வழங்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.