Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பீர்க்கன்கரணை பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முடிவு பேரூராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 06.09.2010

பீர்க்கன்கரணை பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முடிவு பேரூராட்சி தலைவர் தகவல்

தாம்பரம், செப்.6: பீர்க்கன்கரணை பகுதியில் பழுதடைந்த 15க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ1,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி, பீர்க்கன்கரணை பேரூராட்சியில் 15 வார்டுகளில் அதிகளவில் சேதமடைந்த 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 15க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தார் மற்றும் சிமென்ட் சாலைகளாக அமைக்கப்பட உள்ளது.

அதன்படி, டி.டி.கே. நகர் 4வது தெரு விரிவு, சக்தி நகர் மெயின் ரோடு, இந்திரா நகர் சர்ச் ரோடு, காயத்திரி தெரு மற்றும் மணி தெரு விரிவு, வெங்கடேசன் தெரு, சூராத்தம்மன் கோயில் தெரு, டி.கே.சிதம்பரனார் தெரு விரிவு, லட்சுமி தெரு மற்றும் குறுக்கு தெரு, நேதாஜி தெரு, காந்தி ரோடு& ஏரிக்கரை சாலை, ராஜிவ்காந்தி தெரு மற்றும் குறுக்கு தெரு, வேலு நகர் 5வது தெரு, போன்ற சாலைகள் சிமென்ட் சாலைகளாகவும், ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு, விஜயலட்சுமி தெரு, ..சி. தெரு போன்ற சாலைகள் தார் சாலைகளாகவும் அமைக்கப்படுகிறது. இந்த தகவலை பேரூராட்சி தலைவர் த.ராசேந்தின் தெரிவித்தார்.