Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

65 கி.மீ. சாலையை புதுப்பிக்க ரூ. 25 கோடி அரசு ஒதுக்கீடு: மேயர்

Print PDF

தினமணி 22.09.2010

65 கி.மீ. சாலையை புதுப்பிக்க ரூ. 25 கோடி அரசு ஒதுக்கீடு: மேயர்

திருநெல்வேலி,செப்.21:​ ​ திருநெல்வேலி மாநகர் பகுதியில் 65 கி.மீ. சாலையைப் புதுப்பிக்க அரசு ரூ. 25 கோடி ஒதுக்கியுள்ளதாக,​ மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:

திருநெல்வேலி மாநகராட்சி தற்போது 868.24 கி.மீ. சாலையைப் பராமரித்து வருகிறது. இச் சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் புதிய குடிநீர்த் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி,​ பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி,​ மழை,​ வெள்ளம் ஆகியவற்றால் பல சாலைகள் பழுதடைந்துள்ளன.

அவற்றைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதன் விளைவாக சாலைப் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என,​ மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அரசிடமும் வலியுறுத்தி வந்தோம்.

இந்நிலையில்,​ தமிழகத்தில் உள்ள சாலைகளைச் சீரமைக்க அரசு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கியது. இந் நிதியில் இருந்து,​ திருநெல்வேலி மாநகராட்சி சாலைகளைச் சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என கூறினோம். இதற்காக நகரில் தற்போது மோசமாக இருக்கும் சாலைகளை ஆய்வு செய்து,​ அதைச் சீரமைக்க ஆகும் செலவு,​ காலம் போன்ற தகவல்களுடன் மாநகராட்சி உயர் அதிகாரிகள்,​ உள்ளாட்சித் துறை உயர் அதிகாரிகளை சந்தித்தனர்.

​ ​ இதையடுத்து,​ மாநகராட்சி சாலைகளைச் சீரமைக்க ரூ. 25 கோடி வழங்குவதாக அரசு ஆணை பிறப்பித்தது. ஆணையை கடந்த 18-ம் தேதி துணை முதல்வர் மு.. ஸ்டாலின் என்னிடம் தந்தார்.

​ ​ அரசு மானியமாக வழங்கியுள்ள இந் நிதியைக் கொண்டு,​ சிமென்ட்,​ தார் சாலைகள் புதிதாக அமைக்கப்படும். சாலைகள் புதுப்பிக்கும் பணி இந்த நிதியாண்டுக்குள் நிறைவடையும்.

இதேபோல,​ பாளையங்கோட்டை இலந்தகுளத்தில் தீம் பார்க் அமைக்கும் திட்டத்துக்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்கப்படும். மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள வ..சி. கட்டடம் விரைவில் இடிக்கப்பட்டு,​ புதிய கட்டடத்தின் தரைதளம் இந்த ஆட்சிக் காலத்துக்குள் கட்டப்படும் என்றார் அவர்.

பின்னர்,​ மாநிலத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதலிடம் பிடித்த,​ திருநெல்வேலி நகரம் கல்லணை மேல்நிலைப் பள்ளி மாணவி

ஜாஸ்மினுக்கு ரூ. 15 ஆயிரம் பரிசுத் தொகையை மேயர் வழங்கினார்.

மாநகராட்சி ஆணையர் என். சுப்பையன்,​ மண்டலத் தலைவர்கள் எஸ்.விஸ்வநாதன்,​ சுப. சீதாராமன்,​ எஸ்.எஸ். முகம்மது மைதீன்,​ உதவி ஆணையர் ​(பொறுப்பு)​ எல்.கே. பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.