Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடுமலையில் 100 அடி திட்ட சாலைக்காக அளவீடு பணி துவக்கம்

Print PDF

தினமலர் 23.09.2010

உடுமலையில் 100 அடி திட்ட சாலைக்காக அளவீடு பணி துவக்கம்

உடுமலை:உடுமலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பூர், தாராபுரம் ரோடுகளை இணைக்கும் திட்ட சாலை அளவீடு பணிகள் துவங்கியுள்ளது.உடுமலை நகருக்கு வரும் வாகனங்கள் மற்றும் கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் ஒரே வழித்தடமாக பொள்ளாச்சி-பழநி ரோட்டை பயன்படுத்த வேண்டியதுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உடுமலை நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், பை பாஸ் ரோடு அமைப்பதில் இழுபறியாகி வருகிறது.

இந்நிலையில், நகராட்சி சார்பில் 100 அடி திட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, மின் வாரியத்தின் உயர் மின்னழுத்த கோபுரங்கள் இரண்டு மின் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இதற்கு இடையிலுள்ள 110 அடி இடத்தில், 100 அடி ரோடு அமைக்க நகராட்சியால் திட்டமிடப்பட்டது.ஏற்கனவே, உடுமலை பஸ் ஸ்டாண்ட் முதல் தாராபுரம் ரோடு வரை 100 அடி திட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, தாராபுரம் ரோடு முதல் திருப்பூர் ரோடு வரையுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரம் மற்றும் விடுபட்ட திட்ட சாலை பணிகளையும் மேற்கொள்ள நகராட்சி திட்டமிட்டுள்ளது.இதற்கான அளவீடு பணிகள் மற்றும் ரோடு அமைக்கும் இடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் துவங்கின. நகராட்சி தலைவர் வேலுசாமி மற்றும் அதிகாரிகள் திட்ட சாலை அமையவுள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர்.நகராட்சி தலைவர் கூறுகையில், "உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நகராட்சி சார்பில் ஏற்கெனவே 300 மீட்டர் தூரத்திற்கு 100 அடி திட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு தாராபுரம் ரோடுடன் இணைக்க சில மீட்டர் தூரம் மீதம் உள்ளது. திருப்பூர் ரோடையும் இணைக்க நிலம் எடுக்கப்பட வேண்டியுள்ளது. டவர்களுக்கு கீழ் எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது. இதை கணக்கிட்டு திட்ட சாலை அமைக்கப்படுகிறது. விரைவில் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கும் என்றார்.