Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடு​மலையில் திட்​டச் சாலைப் பணி​கள் துவக்​கம்

Print PDF

தினமணி 23.09.2010

உடு​மலையில் திட்​டச் சாலைப் பணி​கள் துவக்​கம்

உடு​மலை,​​ செப்.22: புற​வ​ழிச்​சாலை அமைக்​கும் பணிக்​காக உடு​மலை நக​ராட்​சி​யின் சார்​பில் பணி​கள் புதன்​கி​ழமை துவங்​கின.​ கோவை-​திண்​டுக்​கல் தேசிய நெடுஞ்​சா​லை​யில் அமைந்​துள்ள உடு​மலை நக​ரத்தை அ ன்றா​டம் ஆயி​ரக்​க​ணக்​கான கன ரக வாக​னங்​கள் கடந்து செல்​கின்​றன.​ மேலும் நாளு க்கு நாள் பெருகி வரும் மக்​கள் தொகை கார​ண​மாக ஏற்​ப​டும் போக்​கு​வ​ரத்து நெரி​சல் களால் அடிக்​கடி விபத்​து​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன.​ இத​னால் பொது​மக்​கள் கடும் மன உளைச்​சல்​க​ளுக்கு உள்​ளாகி வரு​கின்​ற​னர்.​ இதைத் தடுக்க உடு​மலை நக​ரில் புற​வ​ழிச்​சாலை ஒன்றை அமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.​

​ இதன்​படி ஏற்​கெ​னவே உள்ள திட்​டச் சாலை​யில் இருந்து வரும் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்​றி​விட்டு ஒரு புற​வ​ழிச்​சாலை அமைக்க உடு​மலை நக​ராட்சி சார்​பில் திட்​ட​மி​டப்​பட்​டது.​ இதற்​காக உடு​மலை நகரை ஒட்டி கிழக்​குப் பகு​தி​யான வெஞ்​ச​ம​டை​யில் இருந்து மேற்கே உள்ள மின் மயா​னம் வரை சுமார் 5 கி.மீ.​ தொலை​விற்கு இந்த திட்ட சாலை அமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.​

​ வெஞ்​ச​ம​டை​யில் இருந்து எஸ்வி மில் பின்​பு​றம் தொடங்கி ஜோதி நகர்,​​ ஐஸ்​வர்யா நகர்,​​ அனு​சம் தியேட்​டர் பின்​பு​றம் வழி​யாக திருப்​பூர் ரோடு வரை 100 மீட்​டர் சாலை​யா​க​வும்,​​ அதன் பிறகு இங்​கி​ருந்து பொள்​ளாச்சி சாலை​யில் அமைந்​துள்ள மின் மயா​னம் வரை 60 அடி சாலை​யா​க​வும் அமைக்க திட்​ட​மி​டப்​பட்​டது.​

​ புற​வ​ழிச்​சாலை அமை​ய​வுள்ள சுமார் 5 கி.மீ.​ நீளத்​திற்கு உள்ள ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்​ற​வும் அந்த நிலங்​களை கைய​கப்​ப​டுத்​த​வும் நக​ராட்சி நிர்​வா​கம் முடிவு செய்​தது.​ இதன்​படி நக​ராட்சி அதி​கா​ரி​கள் கடந்த ஜன​வரி மாதம் இதற்​கான சர்வே பணி​க​ளில் ஈடு​பட்​ட​னர்.​

​ ​ இந்​நி​லை​யில் புற​வ​ழிச் சாலை அமைப்​ப​தற்​கான பணி​கள் புதன்​கி​ழமை தொடங்​கி​யது.​ உடு​மலை நக​ராட்சி ஆணை​யா​ளர் அ.சுந்​த​ராம்​பாள்,​​ பொறி​யா​ளர் செந்​தில்​கு​மார்,​​ சர்​வே​யர் அழ​கி​ரி​சாமி மற்​றும் நக​ராட்சி ஊழி​யர்​கள் இந்த பணி​களை மேற்​கொண்​ட​னர்.​

இது குறித்து உடு​மலை நக​ராட்சி தலை​வர் செ.வேலுச்​சாமி செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி யது:​ முதல் கட்​ட​மாக திருப்​பூர் சாலை முதல் தாரா​பு​ரம் சாலை வரை சுமார் 1 கி.மீ.​ தூரத்​திற்கு இந்​தப் பணி​கள் நடை​பெ​றும்.​ திட்​டச் சாலை​யின் அக​லம் 100 அடி​யாக இருக்​கும்.​ ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட்டு பொக்​லைன் எந்​தி​ரத்​தின் மூலம் சுத்​தம் செய்​யும் பணி தற்​போது துவக்​கப்​பட்​டுள்​ளது.​ நக​ராட்​சி​யின் சார்​பில் மேற்​கொள்​ளப்​ப​டும் இந்த பணி​கள் படிப்​ப​டி​யாக விரி​வு​ப​டுத்​தப்​ப​டும்.​ பிறகு நெடுஞ்​சா​லைத் துறை வசம் ஒப்​ப​டைக்​கப்​ப​டும்.​ இந்​தப் பணி​கள் நிறைவு பெற்​ற​பின் உடு​மலை நக​ரில் போக்​கு​வ​ரத்து நெரி​சல் வெகு​வா​கக் குறை​யும் என்​றார்.