Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

65 கிமீ மாநகராட்சி சாலைகளை பராமரிக்க ரூ.25 கோடி மானியம்

Print PDF

தினகரன் 24.09.2010

65 கிமீ மாநகராட்சி சாலைகளை பராமரிக்க ரூ.25 கோடி மானியம்

நெல்லை, செப். 24: நெல்லை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

நெல்லை மாநகராட்சி பகுதியில் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளின் நீளம் 868.24 கி. மீட்டராகும். புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, பாதாள சாக்கடைத்திட்டம் ஆகியவற்றின் காரணமாக பழு தாகும் சாலைகளை சீரமைப்பது அவசியமாகிறது.

மாநகராட்சி பொதுநிதியிலிருந்தும், அவ்வப்போது ஒதுக்கீடு செய்யப்படும் பகுதி&2 திட்டத்தின் கீழும் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை துரிதமாக முடிக்கும் பொருட்டு அரசிடம் நிதிஒதுக்கீடு செய்து தருமாறு மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.

அதனடிப்படையில் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 65 கிமீ தூரம் சிமென்ட் சாலைகள் மற்றும் தார்ச்சாலைகள் அமைக்க ரூ.25 கோடி மான்யமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணை யினை துணைமுதல்வர் ஸ்டாலின் என்னிடம் வழங்கியுள்ளார். இப்பணியினை மேற்கொள்ள அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிப்பங்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஏற்கனவே ஒவ்வொரு வார்டுக்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி, முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இப்பணிகள் வார்டுகளில் தொடர்ந்து நடக்கும். நெல்லை மாநகராட்சியின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது கமிஷ னர் சுப்பையன், மண்டல தலைவர்கள் பாளை சுப.சீதாராமன், நெல்லை விஸ்வநாதபாண்டியன், மேலப்பாளையம் மைதீன், கவுன்சி லர்கள் சுப்பையாபாண்டியன், பிராங்கிளின் ஆகி யோர் உடனிருந்தனர். கல் லணை மாநக ராட்சி பள்ளி யில் படித்து எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜாஸ்மினுக்கு அரசு சார்பில் கூடுதல் நிதியுதவி ரூ.15 ஆயி ரத்தை மேயர் வழங்கினார்.

நெல்லை பகுதியில் சாலை பராமரிப்புக்காக ரூ.25 கோடி அரசு மானியம் ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையை துணை முதல்வர் ஸ்டாலின் மேயர் சுப்பிரமணியனிடம் வழங்கினார்.