Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

15 வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகளில் ரூ7.08 கோடியில் சாலைகள் அரசு நிதி ஒதுக்கியது

Print PDF

தினகரன் 29.09.2010

15 வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகளில் ரூ7.08 கோடியில் சாலைகள் அரசு நிதி ஒதுக்கியது

திருப்பூர், செப்.29: 15 வேலம்பாளையம் மற்றும் நல்லூர் நகராட்சிகளில் ரூ.7.08 கோடி யில் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகரா ட்சி, பேரூராட்சிகளில் சாலை களை மேம்படுத்தும் வகை யில் ரூ.1000 கோடியில் தமிழக அரசு சிறப்பு சாலைகள் திட்டத்தை செயல்படுத்தி வரு கிறது.

இதற்காக ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எந்தெந்த சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்ற விவரங்களை அரசு கேட்டிருந்தது.

இதையடுத்து ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிதி ஒதுக்கி சாலை பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவினை தமிழக அரசு வழங் கியுள்ளது. அதன்படி, திருப்பூரையடுத்து அமைந்துள்ள 15 வேலம்பாளையம் மற்றும் நல்லூர் நகராட்சிகளுக்கு ரூ.7.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்லூருக்கு ரூ.4.05 கோடி :

15 வார்டுகளை உள்ளடக்கிய நல்லூர் நகராட்சியில், சாலை வசதிகளை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி கோரியிருந்தது நகராட்சி நிர்வாகம். இதனை பரிசீலித்த அரசு, ரூ.4.05 கோடியில் சாலைகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆணை மற்றும் பணி துவக்குவதற்கான ஆணை ஆகியவற்றை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதேபோன்று 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதி யில் சாலைகளை மேம்படுத்த ரூ.3.03 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான பணி நியமன ஆணை மற்றும் நிதி ஒதுக்கீடு ஆணையை அரசு வழங்கியுள்ளது. இவ்விரு நகராட்சிகளிலும் விரைவில் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.