Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூ.59 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

தினகரன் 29.09.2010

தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூ.59 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

பெரியகுளம், செப்.29: தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தாமரைக்குளம் பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் அன்பழகன் தலைமையில் நடந் தது.துணைத்தலைவர் தவமணி ஆறுமுகம், செயல் அலுவலர் காமாட்சி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் சிங்கன், துரைராஜ், பழனியம்மாள், முருகேசன், வனிதா, அக்கிம்ராஜா, மைதிலி அன்பழகன், முருகன், பாலையா, முத்து, ராமதண்டபாணி, முருகேசன், டெய்சி ஆகியோர் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் 1, 2, 3, 4, 5, 7 ஆகிய வார்டு பகுதிகளில் ரூ.19 லட்சத்து 70 ஆயிரமும், வார்டு 8, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் ரூ.19 லட்சத்து 30 ஆயிரமும், வார்டு 7, 8 ஆகிய பகுதிகளில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

பேரூராட்சி பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வது சம்பந்தமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இருந்து பெறப்பட்ட கடிதத்திற்கும் ஒப்புதல் அளிப்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.