Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபி ரோடு மேம்படுத்த ரூ.4.56 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 29.09.2010

கோபி ரோடு மேம்படுத்த ரூ.4.56 கோடி நிதி ஒதுக்கீடு

கோபிசெட்டிபாளையம்: கோபியில் ரோடுகளை மேம்படுத்த 4.56 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் ரோடு மேம்படுத்த ஊரக மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் சிறப்பு சாலைகள் திட்டம் 2010-11ல் 1,000 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் ரோடு சீரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கான உத்தரவை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் சென்ற வாரம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
கோபி நகராட்சியில் ரோடு மேம்படுத்த பல கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டது. இதையேற்று, நான்கு கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கோபி நகராட்சியை சேர்ந்த ஐந்து கவுன்சிலர்கள், தி.மு.., வுக்கு தாவியதால் கடந்த ஃபிப்ரவரி மாதம் முதல் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் தி.மு.., காங்., கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தற்போது, ஒதுக்கப்பட்ட நிதியை 18 வார்டுகளில் மட்டும் ரோடு பணி மேற்கொள்ள இன்று காலை நடக்கும் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் முன் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறாத தி.மு..,வை சேர்ந்த பெருமாள், செந்தில் வடிவு, ராக்கியண்ணன், சண்முகம், .தி.மு.., வை சேர்ந்த மாருச்சாமி, தேன்மொழி, மரகதம், காங்., கட்சியை சேர்ந்த கோபிநாத், மாரிமுத்து, கனகராஜ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த துரைசாமி, .தி.மு..,வை சேர்ந்த சாமிநாதன் ஆகியோர், இன்றைய நகராட்சி கூட்டத்தில் நிதி கேட்பர் அல்லது தீர்மானங்களை ஒத்திவைக்க கோருவர்.எட்டு மாதங்களாக தீர்மானங்களை நிறைவேற்றுவதில் பெரும் புயல் வீசி வரும் கோபி நகராட்சியில், இன்று நடக்கும் கூட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.