Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காட்டுமன்னார்கோவிலில் ரூ1 கோடி செலவில் சாலை பணிகள் விரைவில் துவக்கம்

Print PDF

தினகரன் 30.09.2010

காட்டுமன்னார்கோவிலில் ரூ1 கோடி செலவில் சாலை பணிகள் விரைவில் துவக்கம்

காட்டுமன்னார்கோவில், செப்.30: காட்டுமன்னார்கோவில் பேருராட்சியில் சுமார் 1 கோடி நிதியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

காட்டுமன்னார்கோவில் பேருராட்சிக்கு உட்பட்ட 1,2,17,3,11,9,16 ஆகிய வார்டுகளில் அமைந்துள்ள டி.கே.பி, ஜெயராம், காளியம்மன் கோயில், ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, எட்டியபத்து, அண்ணா, வள்ளலார், திருவிக, எம்.ஆர்.கே, குப்புபிள்ளைசாவடி, இரட்டை தெரு ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட தெருக்கள், நகர்கள், வீதிகள் அனைத்தும் சிமெண்ட் சாலையாக மாற்றப்பட உள்ளது.

இப்பகுதியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் செல்ல முடி யாத சூழல் நிலவும். மேலும் சாலைகள் அனைத்தும் மேடும் பள்ளமுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு பயன்படாத நிலையில் இருந்தது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகினர். வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் ஆட்டோக்களில் நகருக்குள் செல்ல இயலாமல் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இவைகள் அனைத்தும் கருத்தில் கொண்டு சாலை களை சீரமைக்க வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சருக்கு பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, துணை தலைவர் மகாலட் சுமி முருகையன், செயல் அலுவலர் மகாலிங்கம் மற் றும் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பேருராட்சி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துறையின் உத்தரவின்படி சிறப்பு சாலை வசதி திட்டத்தின் கீழ் 83 லட்சத்து 95 ஆயிரம் நிதியில் இப்பகுதிகளுக்குட்பட்ட 3கிமீ தூரம் சாலைகள் அனைத்தும் சிமெண்ட் சாலையாக மாற்ற உத்தரவிடப்பட்டுள் ளது. பேருராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேலும் பேரூராட்சி சார்பில் சாலைக்கரை வீதி 71 லட்சம் நிதியில் சுகாதார துறை அமைச்சரின் நேரடி உத்தரவின் கீழ் தார் சாலை யாக மாற்றப்பட உள்ளது.