Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

Print PDF

தினகரன் 30.09.2010

நெல்லை மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

நெல்லை, செப். 30: நெல்லை மாவட்டத்திற்கு சிறப்பு சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.69.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயராமன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சிறப்பு சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்திற்கு ரூ.69.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதிக்கு ரூ.25.22 கோடியும், 7 நகராட்சிகளுக்கு ரூ.18.6 கோடியும், 36 பேரூராட்சிகளுக்கு ரூ.25.40 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு சாலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் வரும் 31.3.2011க்குள் முடியும். இயற்கை இடர்பாடுகள் மற்றும் ஐந்தாண்டுகளில் பழுதுபட்ட சாலைகள் புதிய திட்டப்பணிகள் ஆகியவை இதில் நிறைவேற்றப்படுகின்றன.

சாலைகள் மிகவும் தரம்வாய்ந்ததாக இருப்பதற்காக அதனை ஆய்வு செய்ய மூன்று குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது குழுவினர் சென்னையில் இருந்து வந்து ஆய்வு செய் வர்.

ரூ.5.25 கோடி செலவில் முருகன்குறிச்சியிலிருந்து கொக்கிரகுளம் பாலம் வரை சாலையை விரிவுபடுத்தி புதிய சாலை அமைக்கப் படும். வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் சர்வீஸ் ரோடு விரைவில் அமைக்கப்படும். ராமையன்பட்டியிலிருந்து கன்டியப்பேரிக்கு இணைப்புசாலை அமைக்க ரூ.4.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் டவுனில் போக்குவரத்து நெருக்கடி குறையும். இவ்வாறு அவர் கூறினார். பிஆர்ஓ ரவீந்திரன் உடனிருந்தார்.