Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

462 சாலைகளை மேம்படுத்த ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடுரூ.4.5 கோடியில் தச்சை-பழைய பேட்டை பைபாஸ் ரோடு

Print PDF

தினமலர் 30.09.2010

462 சாலைகளை மேம்படுத்த ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடுரூ.4.5 கோடியில் தச்சை-பழைய பேட்டை பைபாஸ் ரோடு

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் 462 சாலைகளை மேம்படுத்த 69.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. நெல்லை மாவட்டத்தில் 462 சாலைகளை மேம்படுத்த 69.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் நெல்லை மாநகராட்சியில் 25.22 கோடியிலும், 7 நகராட்சி பகுதிகளில் 18.69 கோடியில் 112 பணிகளும், டவுன் பஞ்., மற்றும் இதர பகுதிகளில் 25.40 கோடி மதிப்பிலும் பணிகளும் நடத்தப்படுகிறது.இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். இயற்கை இடர்பாடுகள் மற்றும் ஐந்தாண்டுகளில் பழுதுபட்ட சாலைகள் புதிய திட்டப் பணிகள் ஆகியவை இதில் நிறைவேற்றப்படுகின்றன.

தரம் வாய்ந்த சாலைகளை அமைக்க மூன்று ஆய்வு குழுக்கள் கண்காணிக்கின்றன. 3வது குழுவினர் சென்னையில் இருந்து வருகின்றனர்.முருகன்குறிச்சி- கொக்கிரகுளம் வரையிலான சாலையை விரிவுபடுத்தி இரு வழி சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 5.25 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பபட்டுள்ளது. உள்ளூர் திட்ட குழுமம் இதற்கான தொகை செலவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தச்சநல்லூரில் இருந்து ராமையன்பட்டி, இலந்தைகுளம், கண்டியப்பேரி வழியாக தென்காசி ரோட்டில் பழையபேட்டை வரை 2.7 கி.மீ தூரம் உள்ள சாலை பைபாஸ் சாலையாக மாற்ற 4.5 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களில் இப்பணி முடிவடையும்.வண்ணார்பேட்டை மேம்பாலத்தை சுற்றியுள்ள இணைப்பு சாலை பணிகள் வரும் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் கூறினார்.