Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழகத்தில் சாலை மேம்பாட்டு வசதிநகர ஊரமைப்பு துறை ரூ.350 கோடி வழங்கல்நகர ஊரைமைப்பு இயக்குனர் தகவல்

Print PDF

தினமலர் 30.09.2010

தமிழகத்தில் சாலை மேம்பாட்டு வசதிநகர ஊரமைப்பு துறை ரூ.350 கோடி வழங்கல்நகர ஊரைமைப்பு இயக்குனர் தகவல்

திருநெல்வேலி:தமிழகத்தில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு நகர ஊரமைப்பு துறை மூலம் 350 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று நகர ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறினார்.இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கட்டட அனுமதி வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கவும், இதில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தை மேற்கொள்ளவும் வசதியாக அனைத்து பகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று கொள்ளப்பட்டு தீர்க்கப்பட்டு வருகிறது.நகரப் பகுதியில் வீடு கட்டுவோர் தங்கள் இடத்தில் 50 சதவீத பகுதியில் வீடு கட்டலாம் என்பது தற்போது 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் கட்டுவோருக்கு 50 சதவீதம் என்பது 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாலையோரம் 50 சதுர மீட்டருக்கு ஒரு பார்க்கிங் வசதி, குடியிருப்புகளில் 75 சதுர மீட்டருக்கு ஒரு பார்க்கிங் வசதி செய்யப்பட வேண்டும். இதில் விதிமுறைகள் இருந்தால் நகர ஊரமைப்பு சட்ட விதிகளின்படி "சீல்' செய்யப்படும்.உள்ளாட்சி அமைப்புகள் 400 சதுர அடி வரையிலும், கலெக்டர் 15 ஆயிரம் சதுர அடி வரையிலும், கல்லூரிகளுக்கு 25 ஆயிரம் சதுர அடிவ வரையிலும் அனுமதி வழங்கலாம். பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு சதுர அடி அனுமதிக்கு எந்தவித வரையறையும் இல்லை.நகரமைப்பு சாலை மேம்பாட்டு வசதிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கடு செய்யப்பட்டுள்ளது. இதில் 350 கோடி ரூபாய் உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகளுக்கு எங்கள் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு திங்கள் கிழமையும் புதிய புள்ளி விபரங்கள் இன்டர்நெட்டில் வெளியிடப்படும் அனைத்து திட்ட அனுமதிகளும் 30 நாட்குளுக்குள் முடித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்பு 6 மாதங்களுக்கு ஒரு முறை உள்ளூர் திட்டக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது மாதம் ஒரு முறை இக்கூட்டம் நடத்தப்படுகிறது.தமிழகம் முழுவதும் மாதம் ஆயிரம் விண்ணப்பங்கள் கட்டட அனுமதிக்காக பெறப்பட்டுள்ளது. இதில் 500 முதல் 550 வரையிலான விண்ணப்பங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.இவ்வாறு நகர ஊரமைப்பு இயக்குனர் கூறினார்.முன்னதாக, மாவட்ட கலெக்டர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பொதுமக்களிடமிருந்து குறைகள் தொடர்பான மனுக்களையும் நகர ஊரைமப்பு இயக்குனர் பெற்று கொண்டார்.இதில் பயிற்சி கலெக்டர் கிரண் குராலா, நகர ஊரமைப்பு உறுப்பினர் செயலாளர் சேகரன், மண்டல துணை இயக்குனர் பாபு, பி.ஆர்.ஓ ரவீந்திரன், ஏ.பி.ஆர்.ஓ நவாஸ்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.