Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொடுங்கையூர் பகுதிகளில் ரூ8.5 கோடியில் கால்வாய் கான்கிரீட் சாலை பணிகள்

Print PDF

தினகரன் 05.10.2010

கொடுங்கையூர் பகுதிகளில் ரூ8.5 கோடியில் கால்வாய் கான்கிரீட் சாலை பணிகள்

சென்னை, அக். 5: கொடுங்கையூரில் ரூ8.5 கோடி செலவில் கால்வாய் சீரமைப்பு பணிகள், கான்கிரீட் சாலை பணிகள் நடந்து வருவதாக மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கொடுங்கையூரில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் விழா நேற்று நடந்தது. மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவொற்றியூர் 1வது வார்டை சேர்ந்த பயனாளிகள் 11 ஆயிரத்து 450 பேருக்கு டி.வி. பெட்டிகளை வழங்கி பேசினார்.

மேயர் பேசுகையில், "கொடுங்கையூரில் சின்னாண்டி மடம், சிறுபாலம் ரூ.20 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்படும். 20க்கும் மேற்பட்ட திறந்தவெளி நிலங்களில் ரூ50 லட்சம் செலவில் பூங்காக்கள், விளையாட்டுத்திடல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 5 கி.மீ. நீளத்திற்கு ரூ2.47 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும், ரூ.2.88 கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியும், ரூ24 லட்சம் செலவில் அலுவலக கட்டிடப் பணிகளும், ரூ17 லட்சம் செலவில் கண்காணிப்பு டவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ரூ2.76 கோடி செலவில் கொடுங்கையூர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.

நிகழ்ச்சியில் வி.எஸ்.பாபு எம்.எல்.., துணை ஆணையர் மு.பாலாஜி, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சைதை ப.ரவி, மண்டல குழுத்தலைவர் டன்லப் ரவி, முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவம் மற்றும் கவுன்சிலர்கள் ஆர்.டி.சேகர், புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சின்னக்கொடுங்கையூர் பள்ளிச் சாலை சந்திப்பில் நடந்த விழாவில், பயனாளிகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை அமைச்சர் கே.பி.பி.சாமி வழங்குகிறார். அருகில், மேயர் மா.சுப்பிரமணியன், வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள்.