Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தென்கரை பேரூராட்சியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

தினகரன் 05.10.2010

தென்கரை பேரூராட்சியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

பெரியகுளம், அக். 5: தென்கரை பேரூராட்சி பகுதியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்க பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் முருகாயி காமராஜ் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் ராஜா, செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கருத்தபாண்டி, பாப்பு, முருகேஸ்வரி, முத்துசுப்பையன், ராஜாமணி, பாலமுருகன், முருகவேல், ஈஸ்வரி, ஜெயந்தி, முருகவேல், நாகராஜ், உஷாராணி, முருகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை பேரூராட்சிகள் இயக்குனரிடம் இருந்து வரப்பட்ட சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் தென்கரை பேரூராட்சி பகுதியில் பணிகள் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதன்படி இத்திட்டத்தின் கீழ் 5, 6, 10 ஆகிய வார்டுகளில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கவும், 2, 3, 7, 8, 9, 15 ஆகிய வார்டுகளில் ரூ.35 லட்சத்து 85 ஆயிரத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலைகள் அமைக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் பேரூராட்சி பகுதிகளில் உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.