Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வந்தவாசியில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு விடுபட்ட பகுதியில் சாலைவசதி

Print PDF

தினகரன் 05.10.2010

வந்தவாசியில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு விடுபட்ட பகுதியில் சாலைவசதி

வந்தவாசி,அக்.5: வந்தவாசி ஒய்யாகண்ணு தெருவில் விடுபட்ட பகுதியில் சாலைவசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வந்தவாசி நகராட்சி 9வது வார்டில் உள்ளது ஒய்யாகண்ணு குறுக்கு தெரு. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை மீராகாதர்ஷா தெரு, குளத்துமேட்டு பகுதி, கண்ணாரதெரு, தர்மராஜ கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், காய்கனி வாங்க செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலரும் இத்தெருவை பயன்படுத்திவந்தனர்.

காலப்போக்கில் குறுக்கு தெருவில் ஒருசிலர் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதால் பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தாமல் நிறுத்தினர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங் களுக்கு முன்னர் நகராட்சி சார்பில் மீராகாதர்ஷா தெருவில் இருந்து அச்சரப்பாக்கம் சாலையுடன் இணைத்து சிமென்ட் சாலை போடப்பட்டது.

ஆனால் அச்சரப்பாக்கம் சாலையில் இருந்து மீராகாதர்ஷா தெருவிற்கு செல்லும் இவ்வழியின் மேற்கு பகுதியில் 200 மீட்டர் தூரம் சாலை அமைக்காமல் உள்ளது. எனவே அச்சாலையை பொதுமக்கள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் மேற்கு பகுதியில் முள்புதர்கள் மண்டிகிடக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாயுடன் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.