Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடியில் ரோடு போட ரூ. 20 கோடி அனுமதி

Print PDF

தினமலர் 11.10.2010

தூத்துக்குடியில் ரோடு போட ரூ. 20 கோடி அனுமதி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி ரோடு போடும் பணிக்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தூத்துக்குடி மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் தலைமையில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி சிறப்புரையாற்றினார்.முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் அருணா, இளைஞர் அணி அமைப்பாளர் ராஜ்மோகன்செல்வின், இலக்கிய அணிச் செயலாளர் திருச்சிற்றம்பலம், தலைமச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட பிரதிநிதி சதா, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செந்தூர்மணி, மாடசாமி, ரவீந்திரன், முருகேசன், மெய்யழகன், சண்முகரவி, பார்த்திபன், சக்திவேல், நல்லமுத்து, பால்ராஜ், நகர செயலாளர்கள் ராமர், ஜெய்னுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் கருணாநிதி 87வது பிறந்த நாளை ஒட்டி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு நிகழ்வை மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நடத்தி வரும் கனிமொழி எம்.பி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த அனுமதியளித்தற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சியில் அக்கறை கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்கள் வாழ்வில் வளம் சேர்க்க பாதாள சாக்கடை திட்ட சாலைகளில் குண்டும், குழியுமான ரோட்டை சீராக்க 20 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும். கோவில்பட்டி நகர மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்னையை சீராக்கும் வகையில் இரண்டாவது பைப்லைன் திட்டத்தை நிறைவேற்ற 82 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும், காயல்பட்டணம் நகராட்சிக்கு இரண்டாவது குடிநீர் திட்டம் நிறைவேற்ற 36 கோடியும், சாலை வசதிக்கு 2 கோடியும் அனுமதித்த தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் அமைய உள்ள சட்ட மேலவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பட்டதாரிகள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க படிவம் 18, 19 மூலம் விண்ணபிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து திமுக தலைமை உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடைய பட்டதாரிகள், ஆசிரியர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பிற மாவட்டத்தை மிஞ்சும் அளவிற்கு சேர்க்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.