Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ16 கோடியில் சாலை பணி தங்கவயல் நகராட்சி தீர்மானம்

Print PDF

தினகரன் 15.10.2010

ரூ16 கோடியில் சாலை பணி தங்கவயல் நகராட்சி தீர்மானம்

தங்கவயல்,அக்.15: தங்கவயல் நகரசபை கவுன்சில் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. அதில் நகரசபை தலைவர் தயாளன், துணை தலைவர் மு.பக்தவச்சலம், கமிஷனர் (பொறு ப்பு) தாசில்தார் தாட்ச்சாயிணி ஆகியோர் கலந்து கொண்டனர். க்ஷஇதில் கர்நாடக நகரசபை சீரமைப்பு ஆணைய நிதி ரூ15 கோடியே 92 லட்சம் செலவில் சாலைகள், கால்வாய் அமைத்தல் மற்றும் ஸ்லம் பகுதிகளில் சிமிண்டு சாலைகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 ராபர்ட்சன் பேட்டை சுவர்ண குப்பம் விவேக் நகர், நாச்சி பள்ளி, உரிகம் பேட்டை ஆண்டரசன் பேட்டை, சாம்பியன், எஸ்.டி.பிளாக், பேண்டு லைன், ராஜர்ஸ் கேம்ப், அசோகா நகர், பைப் லைன் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப்படுகிறது. ஸ்லம் பகுதிகளான காந்தி நகர் உரிகம் பேட்டை 2 வது பிளாக், சாம்ராஜ் பேட்டை அரிசந்திரா கோவிலில் இருந்து சூசைப்பாளையம் வரையிலும் சிமிண்டு சாலைகள் அமைக்கப்படுகிறது.

மேலும் இந்த திட்டத்தில் அசோக் நகர், பவுரிலால் பேட்டை, கவுதம் நகர் பின்புரம் ஆகிய இடங்களில் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றது. மேற்கண்ட தீர்மாணம் நிறைவேறிய பின்னர் கவுன்சிலர்கள் ஜி.குமார், சாம்ராஜ் முத்துகுமார், விஜயகுமார் ஆகியோர் தங்கள் வார்டுகளிலும் முன்னேற்றப் பணிகளை செயல்படுத்த கோரினர். தங்கவயல் நகரசபையின் கவுன்சில் கூட்டத்தில் தலைவர் தயாளன், துணைத்தலைவர் மு.பக்தவச்சலம், கமிஷனர் தாட்சாயிணி கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 15 October 2010 06:09