Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி கூட்டத்தில் முடிவு ரூ3.5 கோடியில் சிமென்ட் சாலை

Print PDF

தினகரன் 18.10.2010

நகராட்சி கூட்டத்தில் முடிவு ரூ3.5 கோடியில் சிமென்ட் சாலை

காஞ்சிபுரம், அக்.18: காஞ்சிபுரம் நகராட்சி கூட்டம், அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ஆணையர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் நடத்திய விவாதம்:

சந்துரு (திமுக):

சிறப்பு சாலை திட்டத்தின் கீழ், 41வது வார்டு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்.

சுரேஷ் (திமுக):

நகராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்ட வரி வசூல் மையங்கள் சரியாக இயங்குவதில்லை. இதனால் வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது.

உமாபதி (பாமக):

பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுமா?

அரங்நாதன்(காங்.):

கொசு மருந்து சரியில்லாததால் கொசுக்கள் குறையவில்லை.

கண்ணன்(அதிமுக):

எனது வார்டில் உள்ள சரவணன் நகர், காமாட்சி நகரில் தெரு விளக்கு எரியவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில், சிறப்பு சாலைகள் திட்டத்தில், காஞ்சிபுரம் தாமல்வார் தெரு, ராயக்குட்டை பள்ளத் தெரு, ரங்கசாமி குளம் மேற்கு, பல்லவன் நகர் மேற்கு உள்ளிட்ட 29 இடங்களில், ரூ3.5 கோடியில் சிமென்ட் சாலை அமைப்பது, ரூ9.5 லட்சத்தில் பாதாள சாக்கடை குழாய் அடைப்பை சரி செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.