Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுவாமிமலை, சோழபுரம் டவுன் பஞ்.,களில் தார் சாலை அமைக்க ரூ.58 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 20.10.2010

சுவாமிமலை, சோழபுரம் டவுன் பஞ்.,களில் தார் சாலை அமைக்க ரூ.58 லட்சம் ஒதுக்கீடு

கும்பகோணம்: ""முதல்வர் கருணாநிதி சாலை மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கியுள்ள 1,000 கோடி ரூபாயில் சுவாமிமலை, சோழபுரம் டவுன் பஞ்சாயத்துக்களுக்கு தலா 58 லட்சம் ரூபாயில் சாலை வசதிகள் செய்து கொள்ள அனுமதியளித்துள்ளார்,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி தெரிவித்தார்.கும்பகோணம் அருகே சுவாமிமலை டவுன் பஞ்சாயத்தில் இலவச "டிவி' வழங்கும் விழா நேற்று கும்பகோணம் ஆர்.டி.., அசோக்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். சுவாமிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் கேசவராஜன் வரவேற்றார். துணைத்தலைவர் முகமதுபாரூக், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பேசினர்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி 1,905 பயனாளிகளுக்கு இலவச "டிவி'க்களை வழங்கி பேசியதாவது: தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துக்கள் போன்ற பகுதிகளில் சாலை என பல்வேறு திட்ட மேம்பாட்டுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய கையெழுத்திட்டு வந்துள்ளதாக அறிவித்தார். அதில், சுவாமிமலை, சோழபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் சாலை மேம்பாட்டுக்கு தலா 58 லட்சம் ரூபாயை அனுமதியளித்துள்ளார்.அவர் முதல்வராக இருக்கும் நேரத்தில்தான் மக்களுக்கு பல திட்டங்கள் கிடைக்கிறது. எனவே, அவர் வாழ்ந்தால் மக்களாகிய நாம் வாழலாம்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.உள்ளூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கணேசன், சுவாமிமலை டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஸ்தபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

* சோழபுரம் டவுன் பஞ்சாயத்தில் தமிழக அரசின் இலவச "டிவி' வழங்கும் விழா நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். சோழபுரம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 2,852 பேருக்கு ஐந்து லட்சத்து 87 ஆயிரத்து 972 ரூபாய் மதிப்புள்ள "டிவி' பெட்டிகளை அமைச்சர் கோ.சி.மணி வழங்கினார்.ஆர்.டி.ஓ., அசோக்குமார், தாசில்தார் போஸ், ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், யூனியன் கவுன்சிலர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.