Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரம் நகரில் ரூ7.50 கோடியில் சிமெண்ட்சாலைஅமைக்கும்பணி அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன்                     23.11.2010

விழுப்புரம் நகரில் ரூ7.50 கோடியில் சிமெண்ட்சாலைஅமைக்கும்பணி அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்

விழுப்புரம், நவ. 23: விழுப்புரம் நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். விழுப்புரம் நகரில் ரூ.30 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. சாலையில் குழாய்கள் புதைக்கப்பட்டு வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக 10 வீதிகளில் இப்பணி முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து ரூ.7.50 கோடி யில் சிமெண்ட் சாலை அமைக் கும் பணி பூந்தோட்டம் வீதியில் நேற்று மாலை துவங்கியது. ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறும்போது, விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கி வெகு விரைவில் முடிந்து இருக்கிறது. வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. நகரில் 103 வீதிகள் உள்ளன. 10 வீதிகளில் இப்பணி முழுமையாக முடிந்துவிட்டது. அந்த 10 வீதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பணி முடிவதற்குள் மற்ற 16 வீதிகளிலும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கிவிடும். 103 வீதிகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டு பிப்ரவரி மாதத்திற்குள் விழுப்புரம் நகரம் முழுவதும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுவிடும். அதுவரை ஏற்படும் சங்கடங்களுக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முடிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள், சிமெண்ட் சாலை பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 7ம் தேதி பார்வையிடுகிறார். புதிய பேருந்து நிலையம், மருத்துவமனை மாற்றம், புதுச்சேரி சாலை (தேசிய நெடுஞ்சாலை), பாதாள சாக்கடை திட்டத்துக்கு கா.குப்பத்திற்கு நீரை தேக்குவது போன்ற பணிகளை எதிர்த்தார்கள். எதற்காக எதிர்த்தார்கள் என்று தெரியவில்லை. திட்டம் ஆரம்பிக்கும்போது கசப்பாகத்தான் இருக்கும். பணிகள் நிறைவடைந்த பிறகு பாராட்டு கிடைக்கிறது.

புதுச்சேரி சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வரியை உயர்த்தாத விழுப்புரம் நகராட்சிக்கு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.7.50 கோடியை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கியுள்ளனர், என்றார்.

புஷ்பராஜ் எம்எல்ஏ, நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், சிகா கல்வி அறக்கட்டளை தலைவர் விசாலாட்சி பொன்முடி, மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி, எக்ஸ்லண்ட் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனர் திருசங்கு, ஸ்டாலின் நற்பணி மன்ற செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் திருப்பதி பாலாஜி, துணை செயலாளர் புருஷோத்தமன், கவுன்சிலர்கள் ஸ்ரீவினோத், ரகுபதி, சுரேஷ்பாபு, கம்பன், மகாலட்சுமி குரூப்ஸ் உரிமையாளர் ரமேஷ், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிறுவனர் அமீர்அப்பாஸ், ஊர்காவல் படை மண்டல தளபதி ஸ்ரீதர், நகர காங்கிரஸ் தலைவர் குலாம்மொய்தீன், நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் டிஆர் ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.