Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ25 கோடியில் சாலை திட்டம் பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

Print PDF

தினகரன்             23.11.2010

ரூ25 கோடியில் சாலை திட்டம் பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

திருச்சி, நவ. 23: சிறப்பு சாலை திட்டத்திற்கு பாரபட்சமாக பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி பேசினர்.

திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந் தது. மேயர் சுஜாதா தலை மை வகித்தார். கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். திமுக கவுன்சிலர் அய்யல்சாமி பேசுகையில், எனது வார்டில் இருந்த சர்ச்சைக்குரிய சுவர் சில தினங்களுக்கு முன் எனக்கு தெரியாமலேயே மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. என்னிடம் கூறியிருந்தால் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக இடிக்க நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றார்.

கமிஷனர் பால்சாமி கூறுகையில், இது மேயர் எடுத்த முடிவு. பாதுகாப்பு காரணங்களுக்காக தான் அதிகமானோர் குவிக்கப்பட்டனர் என்றார்.

அதிமுக எதிர்கட்சி தலைவர் சீனிவாசன் பேசு கையில், வைகுண்ட ஏகாதசியின் போது லட்சக்கணக் கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்து செல்வார்கள். மாநகராட்சிக்கு சொந்தமான இடம் இங்கு அதிக அளவில் உள்ளது.

இவற்றில் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கோயில் நிர்வாகம் சுகாதார பணிகளை மட்டுமே மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது. அதனால் அப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும். தங்கு விடுதி அமைப்பது என்பது கோயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய பணி என்று கமிஷனர் பால்சாமி கூறினார்.

கோட்ட தலைவர் பாலமுருகன் பேசுகையில், மாநகராட்சிக்கு டிரைவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை செய்யவில்லை. இதனால் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. டிரைவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்ய தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெற மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பால்சாமி கூறுகையில், பணியாளர் நியமனத்தில் பல சிரமங்கள் உள்ளன. ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள் நியமனம் செய்ய வரும் 31ம் தேதி டெண்டர் நடக்கிறது என்றார். ரூ25 கோடி மதிப்பிலான சிறப்பு சாலை திட்டத்திற்கு பாரபட்சமாக பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வார்களிலும் பணிகளை சமமாக தேர்வு செய்ய வேண்டும் என்று திமுக, அதிமுக, காங்., மதிமுக கவுன்சிலர்கள் பேசினர். திட்டத்தில் விடுபட்ட வார்டுகளுக்கு மாநகராட்சி பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிறப்பு சாலை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகள் தமிழக அரசிடம் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. அதனால் இதில் திருத்தம் செய்ய இயலாது என கமிஷனர் பால்சாமி கூறினார்.

மேயர் சுஜாதா பேசுகை யில், சிறப்பு சாலை திட்டத்திற்காக ரூ.40 கோடியில் பணிகள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் ரூ.25 கோ 1397904493 மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்தது.

மீதமுள்ள தொ கையை பெற்றுத் தருவதாக அமைச்சர் நேரு உறுதி அளித்துள்ளார். விடுபட்ட வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு சினிமா தியேட்டர் கட்ட எதிர்ப்பு

கன்டோன்மென்ட் காவல்நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரு சினிமா தியேட்டர் அமைக்க அனுமதி கோரும் பொருள் மாமன்ற ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

இதுபற்றி காங்கிரஸ் கவுன்சிலர் ஹேமா பேசுகையில், வணிக வளாகத்திற்கு அருகே பெண்கள் ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளது. தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளிவரும் போது அதிக கூட்டம் கூடும். இது விடுதி மாணவிகள் கல்வியை பாதிப்பதோடு, பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே, சினிமா தியேட்டர் அமைக்க அனுமதி வழங்க கூடாது என்றார்.

தேமுதிக கவுன்சிலர் ஜெரால்டு பேசுகையில், இதுபோன்ற பொருள்களை மாமன்றம் பார்வைக்கு கொண்டு வராமல் ஆரம்ப நிலையிலேயே மறுத்துவிட வேண்டும் என்றார். இதையடுத்து இந்த பொருளை ஒத்திவைப்பதாக கமிஷனர் பால்சாமி கூறினார்.