Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி சிறப்புச் சாலைகள் திட்ட ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமணி                         25.11.2010

மாநகராட்சி சிறப்புச் சாலைகள் திட்ட ஆலோசனைக் கூட்டம்

திருச்சி, நவ. 24: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் "சிறப்புச் சாலைகள் திட்டம் 2010-11'-ன் கீழ் சாலைகளை மேம்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தலைமை வகித்தார். நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மழையால் பழுதடைந்த சாலைகள், புதை சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள், 5 ஆண்டுகளுக்கு மேலாகப் புதுப்பிக்கப்படாத சாலைகள் உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அடிப்படையில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 41.059 கிமீ நீளத்துக்கு சிமென்ட் கான்கிரீட் தளம், 47.107 கிமீ நீளத்துக்கு தார்ச் சாலை அமைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்துக்காக அரசு மானியம் ரூ. 25 கோடி. மொத்த மதிப்பீடு ரூ. 25.19 கோடி. இப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டியது தொடர்பாக ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.