Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.70 லட்சத்தில் சிமென்ட், தார் சாலைகள்

Print PDF

தினமணி            26.11.2010

ரூ.70 லட்சத்தில் சிமென்ட், தார் சாலைகள்

ஸ்ரீவைகுண்டம்,நவ.25: நாசரேத்தில் ரூ.70 லட்சத்தில் கான்கிரீட் சாலைகள், தார் சாலைகள் அமைப்பதென பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாசரேத் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் தலைவர் சா.மாமல்லன் தலைமையில் நிர்வாக அதிகாரி தேவராஜ், துணைத் தலைவர் ஜமீன் சாலமோன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நாசரேத் பேரூராட்சி 2-வது வார்டு பிரகாசபுரம் மறுகால்துறையில் இருந்து கடம்பாகுளம்வரை செல்லும் ஓடையை தூர்வாரி கழிவுநீர் ஓடையை சீரமைப்பது, சுகாதார கேடு, தொற்று நோய் பரவும் அபாயநிலை உள்ளதால் கொசுவை ஒழிக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்குவது, நாசரேத் பேரூராட்சி சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011 ஆம் ஆண்டின் கீழ் ரூ.70 லட்சத்தில் பெத்தானியாநகர் முதல் கந்தசாமிபுரம், திருவள்ளுவர் காலனிவரையிலும், திருமறையூர் பஸ்நிறுத்தம் முதல் ஐ.எம்.எஸ். கட்டடம் வரையிலும், ஆசீர்வாதபுரம் சன்னதி தெரு முதல் வகுத்தான்குப்பம் ரோடு வரையிலும், பிரதர்டன் தெரு முதல் பேருந்து நிலையம் சாலை வரையிலும், பிரகாசபுரம் கூட்டுறவு நகர வங்கி முதல் ஏ.டி.ஸ்ரீதரன் வீடு வரையிலும், வகுத்தான்குப்பம் மற்றும் கீழத்தெரு வரையிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கவும்,

என்.டி.என்.தெரு, ஜெயபாண்டியன் தெரு முதல் வெள்ளரிக்காயூரணி தேவர் சிலை வரை தார் சாலை அமைக்கவும், 2010-2011 இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியில் இருந்து ஆழ்வார்திருநகரி நீரேற்று நிலையம் கிணறு பழுது பார்த்து குழாய் விஸ்தரிப்பு பணியை ரூ.11 லட்சத்தில் மேற்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கொம்பையா, கனியம்மாள், ராமபுஷ்பம், உத்திரக்குமார், ஜான் ஞான தாஸ், மோகன், மீனா ராஜகுமாரி, ஜெசி ஜேம்ஸ், அன்பு, கஸ்தி ஜெயபால், ஜெயராஜ், செல்வின், சந்திரன், சாராள், மத்தேயு ஜெபசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.