Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மண்மாதிரி எடுத்து சோதனை

Print PDF

தினகரன்          07.12.2010

மண்மாதிரி எடுத்து சோதனை

சின்னமனு£ர், டிச. 7: சின்னமனு£ர் நகரில் ரூ.3 கோடியே 54 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மண் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

தமிழக அரசு நகராட்சி பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க சிறப்பு சாலைகள் திட்டத்தின்நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சின்னமனு£ர் நகர்பகுதி 26 வார்டுகளில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதற்கான மண் பரிசோதனைக்கு காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப வல்லுநர்கள் சின்னமனு£ர் வந்தனர். தேரடி, வடக்கு ரதவீதி பகுதிகளில் மண் மாதிரி எடுத்து சென்றனர்.

மண் சோதனை முடிவு தெரிந்தவுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி விடும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.