Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூர் நகராட்சியில் ரூ3.50 கோடியில் சாலை சீரமைப்பு 2 மாதத்தில் நிறைவடையும்

Print PDF

தினகரன்              07.12.2010

பெரம்பலூர் நகராட்சியில் ரூ3.50 கோடியில் சாலை சீரமைப்பு 2 மாதத்தில் நிறைவடையும்

பெரம்பலூர், டிச. 8: பெரம்பலூர் நகராட்சி அவசர கூட்டம் நகராட்சி கூட்டமன்றத்தில் நடந்தது. ஆணையர் சுரேந்திர ஷா, பொறியாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் இளையராஜா தலைமை வகித்து பேசியதாவது: பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. கழிவுநீர் நீரேற்று நிலையங்களுக்கான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான சிறப்பு சாலை திட்டத்தின்கீழ் 2010&11ம் ஆண்டு மேற்கொள்ளப்படுவதற்காக பெரம்பலூர் நகராட்சிக்கு ரூ.3 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பெரம்பலூர் நகராட்சியில் 11.7 கிலோமீட்டர் தூர முள்ள 18 சாலை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி பழைய பஸ்ஸ்டாண்டு பகுதியில் காந்தி சிலையிலிருந்து காமராஜர் வளைவு வரையுள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சாலை. பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து தொலைத்தொடர்புத்துறை அலுவலகம் வரை யிலான மதரஸாசாலை. கன ரா வங்கியிலிருந்து காந்தி சிலை வரையிலான சாலை, திருநகரில் குருஹோட்டல் பகுதியிலிருந்து ஆலம்பாடிசாலை வரையிலான சாலைகள் இந்த பணியில் சீரமைக்கப்படவுள்ளது. இந்த பணிகள் 2 மாதத்தில் முடிவடைய உள்ளது.

இவைதவிர பெரம்பலூர் நகராட்சியில் ஜவஹர்லால்நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் 1வது வார்டில் எம்ஜிஆர் நகர் மற்றும் அண்ணாநகர் பகுதியில் ரூ.7.30 லட்சத்தில் தார்சாலை அமைத்தல். 2வது வார்டில் இந்திராநகர் மற்றும் எம்ஜிஆர் நகர்பகுதியில் ரூ.11.10லட்சம். 9வது வார்டு துறைமங்கலம் வாசுகி தெரு, ஔவையார்தெரு பகுதியில் ரூ.6.80 லட்சம். 12வது வார்டு திருவள்ளுவர் தெருவில் ரூ7.15 லட்சம், 13வது வார்டு டாக்டர் அம்பேத்கர் தெரு மற்றும் சிட்டிபாபு தெரு ஆகியவற்றில் ரூ.7.35 லட்சத்தில் சிமென்ட் சாலைகள் என ரூ.3 கோடியே 49 லட்சத்து 25 ஆயிரத்தில் தார்சாலை, சிமென்ட் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன என்றார்.

பெரம்பலூர் புதுபஸ்ஸ்டான்ட் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ2 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட 20 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. நகரா ட்சி கவுன்சிலர்கள் பாரி, அன்புதுரை, ராமச்சந்திரன், ஜெயக்குமார், மாரிக்கண் ணன், கருணாநிதி, சரவணன், சிவக்குமார், ரஹமத்துல்லா, ஈஸ்வரி, புவனேஷ்வரி, செல் வி, கண்ணகி, பொற்கொடி, தாண்டாயி கலந்து கொண்டனர்.