Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் ரூ. 3.50 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி             09.12.2010

பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் ரூ. 3.50 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

பெரம்பலூர், டிச. 8: பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் ரூ. 3.50 கோடியில் சீரமைக்கப்படும் என்றார் நகர்மன்றத் தலைவர் எம்.என். ராஜா. பெரம்பலூர் நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நகராட்சியின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. கழிவு நீர் நீரேற்று நிலையங்களுக்கான பணிகளும் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் சிறப்புத் திட்டமான சிறப்புச் சாலைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் நகராட்சிக்கு ரூ. 3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் நகராட்சியில் 11.7 கி.மீட்டர் தொலைவுள்ள சாலைகளைச் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பழைய பேருந்து நிலையம் காந்தி சிலையிலிருந்து, காமராஜர் வளைவு வரையுள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சாலை, தொலைத் தொடர்புத் துறை அலுவலகம் வரையிலான மதரஸô சாலை, கனரா வங்கியிலிருந்து காந்தி சிலை வரையிலான சாலை, திருநகரில் இருந்து ஆலம்பாடி பிரிவு சாலை வரையிலான சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது.

இந்தப் பணிகள் அனைத்தும் 2 மாதங்களில் முடிக்கப்படும். மேலும், பெரம்பலூர் நகராட்சியில் ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், 1-வது வார்டில் உள்ள எம்.ஜி.ஆர். நகர், அண்ணாநகர் பகுதிகளில் ரூ. 7.30 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை அமைத்தல், 2-வது வார்டில் உள்ள இந்திராநகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் ரூ. 11.10 லட்சம் மதிப்பிலும், துறைமங்கலம் 9-வது வார்டு பகுதியில் உள்ள வாசுகி தெரு, üவையார் தெரு பகுதிகளில் ரூ. 6.80 லட்சம் மதிப்பிலும், 12-வது வார்டு திருவள்ளுவர் தெருவில் ரூ. 7.15 லட்சம் மதிப்பிலும், 13- வது வார்டு டாக்டர் அம்பேத்கர் தெரு, சிட்டிபாபு தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்படும்.

மேலும், ரூ. 3.50 கோடியில் தார்ச் சாலைகள், சிமென்ட் சாலைகள் சீரமைக்கப்படும் என்றார் அவர். கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றுவது தொடர்பான 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆணையர் சுரேந்திர ஷா, பொறியாளர் கருணாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ. அப்துல் பாரூக், பி. அன்புதுரை, ஆர்.டி. ராமச்சந்திரன், என். ஜெயக்குமார், கே.ஜி. மாரிக்கண்ணன், ஜே.எஸ்.ஆர். கருணாநிதி, கே. கனகராஜ், ஆர். சரவணன், எஸ். சிவக்குமார், எம். ரஹமத்துல்லா, ஆர். ஈஸ்வரி, கே. புவனேஷ்வரி, பி. கண்ணகி, ஜி. பொற்கொடி, எம். தாண்டாயி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.