Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரில் 76 இடங்களில் அமைக்கப்படுகிறது ரூ21 கோடியில் புதிய சாலைகள் பணிகள் துவங்கியது

Print PDF

தினகரன்                 10.12.2010

மாநகரில் 76 இடங்களில் அமைக்கப்படுகிறது ரூ21 கோடியில் புதிய சாலைகள் பணிகள் துவங்கியது

திருப்பூர், டிச.10: சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.21.01 கோடியில், 76 இடங்களில் புதிய சாலை கள் அமைக்கும் பணி திருப்பூரில் நேற்று துவங்கியது. மாநகராட்சி மேயர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி திருப்பூர் மாநகரில் ரூ.21.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கு முறையாக டெண்டர் கோரப்பட்டு, மாநகராட்சி மன்றத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த பணிகள் நேற்று துவங்கின. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ், திருப்பூர் மாநகராட்சி, 4வது வார்டுக்குட்பட்ட புதிய பஸ்நிலையம் பகுதியில் 1.95 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் செல்வராஜ் நேற்று துவக்கி வைத்தார். பூமி பூஜையுடன் இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் கவுதமன் மற்றும் அனைத்து கட்சிகளை கவுன்சிலர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் பணிகள் அடுத்தடுத்து துவங்க உள்ளன. இந்த பணிகள் இன்னும் இரு மாதங்களில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது. பணிகள் தரத்துடன் நடக்கிறதா என்பது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘’ரூ.21.02 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் அனைத்தையும் மிகவும் தரத்துடன் மேற்கொள்ள பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பணிகள் நடக்கிறதா என்பது தொடர்பாகவும், பணிகளின் தரம் குறித்தும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த பணிகள் தரத்துடனும், விரைந்தும் மேற்கொள்ளப்படும்," என்றார்.