Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 21 கோடியில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமணி              10.12.2010

ரூ. 21 கோடியில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

திருப்பூர், டிச.9: சிறப்புச் சாலை திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் பழுதான சாலைகளை ரூ. 21.02 கோடியில் சீரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு பழுதடைந்துள்ள சாலைகளை புதுப்பிக்கும் விதமாக சிறப்புச் சாலை திட்டத்தை ஏற்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்தது. அதனடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 112 சாலைகள் தேர்வு செய்யப்பட்ட அச்சாலைகளை ரூ.32 கோடி மதிப்பில் புதுப்பிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதில், 76 சாலைகளை மட்டும் அரசு தேர்வு செய்து ரூ.21.02 ஒதுக்கீடு செய்துள்ளது.

தேர்வு செய்யப்பட்ட சாலைகள் 11 பிரிவாக பிரிக்கப்பட்டு அதில் 7 பணிகளுக்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்கு மாமன்ற அனுமதி பெறப்பட்டதை அடுத்து தற்போது அச்சாலைகள் சீரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை துவங்கியது.

முதற்கட்டமாக, 4வது பிரிவுக்கு உட்பட்ட மாநகராட்சி 3,4 வார்டுகளில் 1.22 கோடி, 17வது வார்டில் ரூ.7.10 கோடி, 3,5 வார்டுகளில் ரூ.12.35 கோடி, 1வது வார்டில் ரூ.14 கோடி, 4-வது வார்டில் ரூ.5 கோடி, 4-வது வார்டில் ரூ.35.20 கோடி என மொத் தம் ரூ.1.96 கோடியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

அஞ்சல் நகரில் நடக்கும் இப்பிரிவு பணிகளை மேயர் க.செல்வராஜ் வியாழக்கிழமை பூமிபூஜை போட்டு துவக்கினார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாலை களையும் புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, பொறியாளர் கௌதமன், மாமன்ற உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், சு.சிவபாலன், எம்.அருணாச்சலம், ஆர்.சந்திரசேகர், சி.கணேஷ், எஸ்.வாசுகி, பி.ஆர்.நடராஜன், வி.கே.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.