Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூரில் ரூ.3 கோடியில் சாலைப்பணிகள்

Print PDF

தினகரன்            15.12.2010

கடையநல்லூரில் ரூ.3 கோடியில் சாலைப்பணிகள்

கடையநல்லூர், டிச. 15: கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறப்பு சாலை திட்ட பணிகள் துவங்கியது.

தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் சுமார் ரூ.65 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த ரோடுகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளால் சேதமடைந்த சாலைகள் உட்பட பல்வேறு சாலைகள் இந்த சிறப்பு சாலை திட்டத்தின் மூலம் பொழிவு பெற உள்ளது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பேட்டை மலம்பாட்டை சாலையை ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் தார் தளமும், கரியமாணிக்க பெருமாள் கோயில் ரதவீதிகளில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் கான்கிரீட் தள மும், 33வது வார்டு கருப்பசாமி கோயில் தெரு, வடக்கத்தி அம்மன் கோயில் தெரு உட்பட பல்வேறு ரோடுகளில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் தார் தளமும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் இதற்கான பணிகள் நேற்று துவங்கியது. பேட்டை மலம்பாட்டை சாலை தார்தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணி களை நகராட்சி இளநிலை பொறியாளர்கள் அகமது அலி, உதவியாளர்கள் ராமகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

காண்டிராக்டர்கள் அருணாசலம், ரவிராஜா, முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மண் சாலையே இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி துவங்கியது.

Last Updated on Wednesday, 15 December 2010 05:55