Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் ரூ. 117 கோடியில் சாலை சீரமைப்பு பணி

Print PDF

தினகரன்       24.12.2010

சென்னையில் ரூ. 117 கோடியில் சாலை சீரமைப்பு பணி


சென்னை, டிச.24: சென்னையில் ரூ. 117 கோடி செலவில் சாலை சீரமைக்கப்படுகிறது. இந்த பணியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் சாந்தோம் நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் துணை முதல்வர் கூறியதாவது: தொடர்மழையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான சாலைகள் பழுதடைந்துள்ளன. சுமார் 387 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பழுதடைந்துள்ளன. இந்த சாலைகளை சீரமைக்க சிறப்பு சாலைகள் திட்டம் 2010&2011ன் கீழ் ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 146 கி.மீ. நீளமுள்ள 266 பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் சீரமைக்க ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ஏற்கனவே மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 141 கி.மீ. நீளமுள்ள சாலை ரூ. 37 கோடியில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஆக சென்னையில் 1320 சாலைகள் 387 கி.மீ.நீளத்திற்கு ரூ. 117 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இந்த பணிகள் 100 நாளில் முடிக்கப்படும். இவ்வாறு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர் (பணிகள்) தரேஷ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

துணை முதல்வர் நேரில் ஆய்வு.


 
மழையால் பழுதடைந்த சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி நேற்றிரவு தொடங்கியது. அதை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அருகில் மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் ஆகியோர்.