Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குன்னூர் ஓடை மீது சிமென்ட் தளம் அமைக்கும் பணி இன்று துவக்கம்

Print PDF

தினகரன்                27.12.2010

குன்னூர் ஓடை மீது சிமென்ட் தளம் அமைக்கும் பணி இன்று துவக்கம்

குன்னூர், டிச.27:

குன் னூர் விபி தெரு ஓடை யின் மீது மேல் தளம் அமைக்கும் பணிகள் இன்று மீண்டும் துவங்குகிறது.

குன்னூர் நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் குன்னூர் விபி தெரு ஓடை மீது மேல் தளம் அமைக்க கடந்த 2 ஆண்டுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியது. இப்பணியை எடுத்த ஒப்பந்ததாரர் பல்வேறு காரணங்களால் பணி யை தொடர முடியவில்லை. அவருக்கு வழ ங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்து வேறு ஒருவருக்கு டெண்டர் வழங்கப்பட்டது. விபி தெரு ஓடையில் ரூ.15 லட்சம் செலவில் தடுப்பு சுவரும் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன் பணி துவங்கிய போது தரை மட்டத்திற்கு கீழ் அதிகளவில் கற்கள் இருப்பதால் தூண்கள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் இப்பணி மீண்டும் தடைபட்டது. நகராட்சி கூட்டத்தில் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். நகராட்சி தலைவர் ராமசாமி, இப்பணி தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினார். அதன் பேரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் குழுவினர் குன்னூரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் இக்கல்லூரி பேராசிரியர் அருமை ராஜ் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். நகரா ட்சி ஆணையர் சண் முகம், துணை பொ றியாளர் வெங்கடாசலம் ஆகியோர் உடனடிருந்தனர். ஆய்வின் முடிவில் பேராசிரியர் அருமைராஜ் கூறுகையில், ஓடையில் தூண்கள் நிறுவப்படும் இடத்தில் தடையாக இருக்கும் கற்களை அப்புறப்படுத்தி விட்டு 16 அடி உயர 24 தூண்களை நிறுவலாம். தூண்கள் எழுப்பிய பிறகு அப்புறப்படுத்தப்பட்ட கற்களைமீண்டும் அந்த இடத்தில் பரப்பி விட வேண்டும். பிறகு தூண்கள் மீது சிமென்ட் தளம் அமைக்க வேண்டும் என்று யோசனை வழங்கினார். இதைத்தொடர்ந்து நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த மேல் தளம் அமைக்கும் பணி இன்று முதல் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடை சீசனுக்கு முன்னதாக இப்பணியை முடித்து தர ஒப்பந்ததாரர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இப்பணி முடிந்தால் நகர பகுதியில் உள்ள வாகனங்கள் எவ்வித இடையூறும் இன்றி சென்று வர முடியும்.