Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறப்புச் சாலை: தலைமைப் பொறியாளர் ஆய்வு

Print PDF

தினமணி      04.02.2011

சிறப்புச் சாலை: தலைமைப் பொறியாளர் ஆய்வு

  திருச்சி, பிப். 3: திருச்சி மாநகராட்சியில் ரூ. 25 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புச் சாலை திட்டப் பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் ஆர். ரகுநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

  கோ-அபிஷேகபுரம் கோட்டம் சக்திநகர் குறுக்குத் தெருவில் ரூ. 23.97 லட்சத்தில் 466 மீட்டர் நீளத்துக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி, பாபா காலனி, எடமலைப்பட்டிபுதூர் ஸ்டேட் வங்கி காலனி 1,2-வது தெருவில் ரூ. 28.33 லட்சத்தில் 1416 மீட்டர் நீளத்துக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி, முருகன் நகர் 1-வது தெருவில் 375 மீட்டர் நீளத்துக்கு ரூ. 12.18 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, சக்தி காலனியில் 330 மீட்டர் நீளத்துக்கு ரூ. 12.79 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை ரகுநாதன் பார்வையிட்டார்.

  தொடர்ந்து பொன்மலைக் கோட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க அறிவுரை வழங்கினார்.

  இந்த ஆய்வின்போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், உதவிச் செயற்பொறியாளர் எஸ். நாகேஷ், என். பாலகுருநாதன், எஸ். கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Last Updated on Thursday, 03 March 2011 09:19