Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டிவனத்தில் பிளாஸ்டிக் சாலை

Print PDF

தினமலர்                30.07.2012

திண்டிவனத்தில் பிளாஸ்டிக் சாலை


திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் ரோடு பணியை சேர்மன் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.

 திண்டிவனம் செஞ்சி ரோடிலிருந்து கல்லூரி சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படுகிறது. மொத்தம் 20 லட்சம் மதிப்பில் நகராட்சில் முதன்முறையாக அமைக்கப்படுகின்ற பிளாஸ்டிக் ரோடு பணியை சேர்மன் வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்தார்.

அவருடன் கவுன்சிலர் ராஜேந்திரன், அ.தி. மு.க., நகர அவைத் தலைவர் மணிமாறன், சிறுபான்மைப் பிரிவு ஜாகீர் உசேன், அரிமா சங்க மாவட்டத் தலைவர் கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் சேட்டு உடனிருந்தனர்.சாலை பணியை ஒப்பந்ததாரர் குமார், சேர்மன் வெங்கடேசனிடம் விளக்கி கூறினார்.