Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 63 லட்சம் செலவிலான புதிய சாலை திறப்பு

Print PDF

தினமணி                   03.08.2012

ரூ. 63 லட்சம் செலவிலான புதிய சாலை திறப்பு

கோவை,  ஆக. 2: கோவை மாநகராட்சிக்கு   உள்பட்ட  கிழக்கு    மண்டலத்தில்  ராஜீவ்   காந்தி நகரில் ரூ. 63 லட்சம் செலவில்  அமைக்கப்பட்ட புதிய  சாலையை  மேயர்  செ. ம.  வேலுசாமி திறந்து வைத்தார்.கோவை, ஜி.வி. ரெசிடென்ஸி  அருகே ராஜீவ் காந்தி நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை மேயர் செ.ம. வேலுசாமி நட்டார்.  பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிவடைந்த இடத்தில் ரூ. 63 லட்சம் செலவில் 2.94 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட தார்ச் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கும் அவர் திறந்து வைத்தார்.

மாநகராட்சி  ஆணையாளர்  தி.க.  பொன்னுசாமி, துணை  மேயர்  லீலாவதி  உண்ணி, மண்டலத் தலைவர் கே.ஆர். ஜெயராமன்,  சுகாதாரக்  குழுத் தலைவர்  எஸ் .தாமரைச்  செல்வி,  மாமன்ற உறுப்பினர்கள்  வளர்மதி,  வெள்ளியங்கிரி,  காவல் துறை  உதவி   ஆணையர்  சந்திரசேகரன், மக்கள்  தொடர்பு   அலுவலர்  தமிழ்மொழி  அமுது, கிழக்கு மண்டல  உதவி  ஆணையாளர் வி.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூய்மைப் பணி ஆய்வு: கோவை மாநகராட்சியின் 48-வது வார்டில்  சிறப்பு தூய்மைக் குழுபணி செய்து  வருவதை  வியாழக்கிழமை  ஆய்வு  செய்தார்,   மேயர்   செ.ம. வேலுசாமி. நால்வர் லேஅவுட்டில் ரூ. 42 லட்சம் செலவில்  பாதாள சாக்கடைப் பணி முடிந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி, செல்லப்ப கவுண்டர் லேஅவுட்டில் ரூ. 31.05 லட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளையும் மேயர் பார்வையிட்டார்.ஆணையாளர் தி.க. பொன்னுசாமி, துணை ஆணையாளர் சு.சிவராசு,  துணை மேயர் லீலாவதி உண்ணி, நிதிக்குழு மற்றும் வரி விதிப்புக் குழுத்   தலைவர்    பிரபாகரன்,  மாநகரப்    பொறியாளர்   கருணாகரன்,   செயற்பொறியாளர் லட்சுமணன், நகர்நல அலுவலர் பி.மனோகரன், உதவி நகர்நல அலுவலர் பி.அருணாஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 03 August 2012 09:43