Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூர் புறவழிச்சாலைக்கு இணைப்புச் சாலைகள் அமைக்க ரூ. 23 கோடி

Print PDF
தினமணி                   03.08.2012

பெரம்பலூர் புறவழிச்சாலைக்கு இணைப்புச் சாலைகள் அமைக்க ரூ. 23 கோடி


பெரம்பலூர், ஆக. 2: பெரம்பலூர் புறவழிச் சாலையை நகரத்துடன் இணைப்பதற்கான இணைப்புச் சாலைகள் அமைக்க ரூ. 23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் நகரின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த 10 காவலர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். தற்போது, 34 காவலர்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் முழுமையாக ஈடுபட உள்ளனர். ஷேர் ஆட்டோக்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் தொடர்ந்து எரிய, கண்காணிப்புப் பணியில் அலுவலர்கள் ஈடுபடுவார்கள். ரூ. 50 லட்சம் மதிப்பில் 7 இடங்களில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக பேருந்து நிழல் குடைகள் அமைக்கப்படும்.

போக்குவரத்தை சீரமைப்பதற்காக, சாலைகளின் இரு புறங்களிலும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் பாதிக்கப்படும் மக்களுக்கு, நகரின் அருகாமையில் உள்ள பகுதியில் அரசுத் திட்டங்கள் மூலம் இடம் ஒதுக்கி, வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்து சிக்னல்கள் சூரிய சக்தி மூலம் இயங்கும் வகையில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சிக்னல்கள் அருகே அமைக்கப்பட்டுள்ள கேமரா மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெரம்பலூர் புறவழிச் சாலையை நகரத்துடன் இணைப்பதற்கான இணைப்புச் சாலைகள் அமைக்க, ரூ. 23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைகள் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நகரச்சாலைகளை பயன்படுத்தாமல், புறவழிச்சாலைக்கு சென்று திருச்சி- சென்னை 4 வழிச்சாலையை அடைய இயலும் என்றார் அவர்.