Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் ரூ.190 கோடி செலவில் 2,189 தெரு சாலைகள் பிளாஸ்டிக்,சிமெண்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது

Print PDF

மாலை மலர்         03.08.2012

சென்னையில் ரூ.190 கோடி செலவில் 2,189 தெரு சாலைகள் பிளாஸ்டிக்,சிமெண்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது

சென்னையில் ரூ.190 கோடி செலவில்
2,189 தெரு சாலைகள் பிளாஸ்டிக்,சிமெண்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது

சென்னை, ஆக. 3-சென்னையில் உள்ள தெருச் சாலைகளை நீண்ட காலம் உழைக்கும் வகையில் பிளாஸ்டிக் கலந்த தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 245.1 கிலோ மீட்டர் தூரம் உள்ள 1105 சாலைகள் பிளாஸ்டிக் கலந்த தார் சாலைகளாக மாற்றப்படுகிறது. இதற்காக ரூ.100.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. வருகிற 10-ந்தேதி டெண்டர் இறுதி செய்யப்படுகிறது. மண்டல வாரியாக சீரமைக்கப்படும் சாலைகள் எண்ணிக்கை வருமாறு:-

திருவொற்றியூர்-99 மணலி-58, மாதவரம்-170, தண்டையார்பேட்டை-108, ராயபுரம்-14, திரு.வி.க. நகர்-72, அம்பத்தூர்-37, தேனாம்பேட்டை-44, கோடம்பாக்கம்-81, வளசர வாக்கம்-108, ஆலந்தூர்-63, அடையாறு-117, பெருங் குடி-79, சோழிங்க நல்லூர்-55. டெண்டர் உறுதி செய்யப்பட்டதும் இன்னும் 2 வாரத்தில் இந்த பணிகள் தொடங்கி விடும்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு இந்த ரோடுகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் 1084 தெரு சாலைகள் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட உள்ளன. இந்த ரோடுகளில் உள்ள குடிநீர், மற்றும் தொலை தொடர்பு, கேபிள் இணைப்புகளை ரோட்டின் ஓரமாக மாற்றும் பணி முடிந்ததும் டெண்டர் விடப்படும்.

இந்த ரோடுகளுக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (செம்டம்பர்) முதல் வாரத்தில் சிமெண்ட் ரோடு போடும் பணிகளும் தொடங்கி விடும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.