Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை பராமரிப்பை தனியார்மயமாக்க ஒப்புதல்

Print PDF

தினமணி   20.08.2012

சாலை பராமரிப்பை தனியார்மயமாக்க ஒப்புதல்

புது தில்லி, ஆக. 19:  மாநகராட்சியிடமிருந்து அண்மையில் எடுத்துக் கொள்ளப்பட்ட சாலைகளின் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சர் ராஜ்குமார் செüகான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாகப் பொதுப்பணித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், ""மாநகராட்சியிடமிருந்து திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்ட சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன.

அவ்வாறு மேம்படுத்தப்படும் சாலைகளில் கிராமப்புறச் சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சாலைகள் அமைக்கிற நிறுவனத்திடமே, பராமரிப்பும் பணியும் அளிக்கலாம் என்ற  யோசனையை பரிசீலிக்கப்பட்டது.

பொதுப் பணித்துறை வசம் உள்ள பிரஸ் என்கிளேவ், மெஹரோலி - பதர்பூர் பார்டர் சாலை, சாவித்திரி சினிமா, ஷேக் சராய் பேஸ் 1, பஞ்சசீல் என்கிளேவ், மஸ்ஜித் ரோடு, கிரேட்டர் கைலாஷ் பார்ட் 2 - எம் பிளாக், ஆண்டூஸ் கஞ்ச், அகஸ்ட் கிராந்தி மார்க் ஆகிய சாலைகளின் பராமரிப்பையும் தனியாரிடம் அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.''