Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆலந்தூர் பகுதியில் ரூ. 13 கோடி செலவில் சாலைப்பணிகள்: மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்

Print PDF
மாலை மலர்    27.08.2012

ஆலந்தூர் பகுதியில் ரூ. 13 கோடி செலவில் சாலைப்பணிகள்: மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்   
  
 
சென்னை, ஆக. 27-
ஆலந்தூர் பகுதியில் ரூ. 13 கோடி செலவில் சாலைப்பணிகள்: மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்
ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள 1646 சாலைகளில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுப் பணிகளின் கீழ் 104 சாலைகள் ரூபாய் 55.31 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 156-வது வட்டத்தில் ரூ.3.48 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்த பகுதியில் 31 தார் சாலைகள் ரூ.10.32 கோடி செலவில் அமைக்கும் பணியை மேயர் சைதை துரைசாமி இன்று துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் சாலைகள் பின்னர் அவர் பேசியதாவது:-
 
சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக முதல்வர் உத்தரவுப்படி சாலைப்பணிகள், மழைநீர் வடிகால், குடிநீர், கழிவுநீர் திட்டங்களுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் பிளாஸ்டிக் சாலைகள், கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று 2004ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அத்திட்டம் இடையில் வந்த ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டது.
 
முதல்வர் உத்தரவுப்படி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. 1100 உட்புற சாலைகள் ரூ.115 கோடி மதிப்பீட்டில் பிளாஸ்டிக் தார்ச்சாலை களாக மழைக்காலம் துவங்கும் முன்பே மாற்றப் படும். 1000-க்கு மேற்பட்ட உட்புற சாலைகள் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைகளாக மாற்ற ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. மேலும் 60 பெரிய சாலைகள் உலகத்தரத்திற்கு இணையாக மாற்றப்படுகிறது.
 
அதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் உரம், டீசல் மற்றும் பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பது நவீன முறையில் குப்பைகள் அகற்றுவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு 14 உலகளா விய நிறுவனங்கள் பங்கேற் றுள்ளன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இன்னும் 6 முதல் 9 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
 
நிகழ்ச்சியில் துணை மேயர் பெஞ்சமின், மண்டல குழுத்தலைவர் வெங்கட்ராமன், மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜ், மணப்பாக்கம் பாண்டி ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.