Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூரில் ரூ 9 கோடி செலவில் 78 சாலைகள் அமைப்பு அமைச்சர் மேயர் தொடங்கினர்

Print PDF

தினகரன்      04.09.2012

திருவொற்றியூரில் ரூ 9 கோடி செலவில் 78 சாலைகள் அமைப்பு அமைச்சர் மேயர் தொடங்கினர்

திருவொற்றியூர், : திருவொற்றியூர் மண்டல பகுதிகளில் ரூ 8.9 கோடி செலவில் 78 சாலைகளுக்கான பணியை அமைச்சர் மாதவரம் மூர்த்தி, மேயர் துரைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 
திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ 8.9 கோடி செலவில் 78 சாலை பணிகளுக்கான தொடக்க விழா பெரியார் நகரில் நேற்று நடந்தது. மண்டலக்குழு தலைவர் தன ரமேஷ் தலைமை வகித்தார். எம்எல்ஏ குப்பன் வரவேற்றார். அமைச்சர் மாதவரம் மூர்த்தி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சாலை பணியை தொடங்கி வைத்தனர்.அப்போது மேயர் பேசியதாவது: சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டுக்காக தமிழக முதல்வர் ரூ 2000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

அந்த வகையில் திருவொற்றியூரில் ரூ 30 கோடி செலவில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் தூய்மைபடுத்தும் பணி நடக்கிறது. இப்பணி விரைவில் முடிக்கப்படும். சாலை அகலப்படுத்துதல், பாதாள சாக்கடை திட்டப்பணியும் முழுவீச்சில் நடக்கிறது.

கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு துப்புரவு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளை முழுமையாக சீரமைக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.
எங்கள் நிர்வாகத்தில் முறைகேடு, ஊழல் நடக்காது. விதிமீறல்கள் இல்லாமல் கட்டுமான பணி நடக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும்.இவ்வாறு மேயர் பேசினார்.கவுன்சிலர்கள் எழிலரசி, சூர்யபாபு, அமுல்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பரமசிவம், பத்மநாபன்,  இந்திரா சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் நாகம்மாள் நன்றி கூறினார்.