Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டிவனம் நகரில் ரூ.1 கோடியில் சாலைகள்

Print PDF
தினமணி         29.03.2013

திண்டிவனம் நகரில் ரூ.1 கோடியில் சாலைகள்


திண்டிவனம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நகரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய சிமெண்ட் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையர் ஆர்.எஸ்.ராமலிங்கம் மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற நகர்மன்ற அவரசக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகரில் உள்ள 32-வது வார்டில் 4 லட்சத்து 75 ஆயிரத்தில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், 33-வது வார்டில் 5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைத்தல், 5-வது வார்டில் ரூ.7 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, 4-வது வார்டில் ரூ.4.5 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை என, ரூ.1 கோடிக்கு மேல் நகரின் பல்வேறு வார்டுகளில் தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கவும், ரூ.50 லட்சம் செலவில் நகரின் பல்வேறு வார்டுகளில் வடிகால் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 124 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.

கருணாவூர்பாட்டை செல்லும் வழியில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ஜனார்த்தனன் வைத்த கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

திமுக நகர்மன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.எஸ். ரவி, திண்டிவனம் நகருக்கு எங்கு, எப்போது புதிய பஸ் நிலையம் அமையுமென கேள்வி எழுப்பினார். நடப்பு நிதியாண்டில் நிதி கிடைத்தபிறகு அதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.