Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சிப் பகுதியில் மின்விளக்கு சீரமைப்புப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF
தினமணி       04.04.2013

நகராட்சிப் பகுதியில் மின்விளக்கு சீரமைப்புப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு


பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில், நவீன ஹைட்ராலிக் இயந்திர ஏணி மூலம் தெரு விளக்குகள் சீரமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் பாலக்கரை வளைவு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சோடியம் விளக்குகள் சீரமைக்கும் பணி நடைபெறுவதை பார்வையிட்ட ஆட்சியர் கூறியது:

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 417 சோடியம் விளக்குகள், 48 நவீன எல்.ஈ.டி விளக்குகள், 2,026 குழல் விளக்குகள் (டியூப் லைட்) உள்பட மொத்தம் 2,491 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை, இந்த விளக்குகளில் பழுது ஏற்பட்டால் ஏணிகளை பயன்படுத்தி சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, தெருவிளக்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் வாகனத்தில் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் மூலம் இயங்கும் நவீன இயந்திர ஏணி வாங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் எளிதாக தெரு விளக்குகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இயலும். தற்போது நகரில் உள்ள மொத்த தெரு விளக்குகளில் 78 சத விளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் நகரில் உள்ள அனைத்து விளக்குகளும் சீரமைக்கப்படும் என்றார் அவர். இந்த ஆய்வின்போது, நகர்மன்றத் தலைவர் சி.ரமேஷ், நகராட்சி ஆணையர் குருசாமி, நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி, பணி மேற்பார்வையாளர் குமரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.