Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூரில் நவீன ஹைட்ராலிக் எந்திரம் மூலம் மின்விளக்குகள் சீரமைப்பு

Print PDF
தினத்தந்தி        05.04.2013

பெரம்பலூரில் நவீன ஹைட்ராலிக் எந்திரம் மூலம் மின்விளக்குகள் சீரமைப்பு


பெரம்பலூர் நகராட்சி பகுதியில் நவீன ஹைட்ராலிக் எந்திர ஏணியை கொண்டு மின்விளக்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

நவீன ஹைட்ராலிக் எந்திர ஏணி

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் தெருவிளக்குகளை சரிசெய்து சீரமைக்கும் பணி நவீன ஹைட்ராலிக் எந்திர ஏணியை கொண்டு நடை பெற்று வருகிறது. பாலக்கரை வளைவு முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை யிலான சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சோடி யம் விளக்குகளை சீரமைக்கும் பணி நடைபெறுவதை கலெக் டர் தரேஷ் அகமது பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித் ததாவது:

2 ஆயிரத்து 491 விளக்குகள்

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 417 சோடியம் விளக் குகள், 48 நவீன எல்.ஈ.டி. விளக்குகள், 2 ஆயிரத்து 26 குழல் விளக்குகள் உட்பட மொத்தம் 2ஆயிரத்து 491 விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த விளக்கு களில் பழுது ஏற்பட்டால் இதுவரை மர ஏணிகளை பயன்படுத்தி சரி செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது தெருவிளக்கு சீரமைப்பு பணிகளை மேற் கொள்வதற்காக ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வாகனத்தில் பொருத்தப்பட்ட, ஹைட் ராலிக் மூலம் இயங்கும் நவீன எந்திர ஏணி வாங்கப் பட்டுள் ளது. இதனைக் கொண்டு எளிதாக தெருவிளக்குகள் சீரமைப்பு பணிகளை மேற் கொள்ள இயலும்.

78 சதவீதம்

தற்போது நகரில் உள்ள மொத்த தெருவிளக்குகளில் 78 சதவீத விளக்குகள் சீரமைக்கப்பட்டு ஒளிர்ந்து வருகின்றன. இன்னும் ஒரு வார காலத்திற்குள் நகரில் உள்ள அனைத்து விளக்குகளும் சீரமைத்து ஒளிர வைக்க பணிகள் விரைவாக நடை பெற்று வருகின்றன. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

யார்யார்?

இந்த ஆய்வின்போது நகராட்சி தலைவர் சி.ரமேஷ், நகராட்சி ஆணையர் குருசாமி, நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி, பணி மேற் பார்வையாளர் குமரன் உள் பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.