Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை விரிவாக்கத்தால் சென்னைவாசிகளுக்கு பயன்

Print PDF
தினகரன்                    06.04.2013

சாலை விரிவாக்கத்தால் சென்னைவாசிகளுக்கு பயன்


உள்கட்டமைப்பு வசதிகள் பெருகினால் தான் ஒரு நகரம் வளர்ச்சி அடைய முடியும். கட்டமைப்பு வசதிகள் ஒரு நகரின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு போன்றது. அவை சீராக வளர்ச்சி அடைந்தால் சமூகமும், பொருளாதாரமும் வளர்ச்சியடையும்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விமான நிலைய நவீனமயமாக்கல், மெட்ரோ ரயில், முக்கிய சாலைகள் விரிவாக்கம், புதிய பாலங்கள் என பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதிக வாகனங்கள் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு வந்தது. தற்போது அந்த சாலையில் உள்ள அனுமதியில்லாத வாகன நிறுத்துமிடங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து சீரடைந்துள்ளது. அந்த பகுதியில் நகருக்கு வெளியே குடியிருப்பவர்கள் இதனால் பெரிதும் பயனடைந்துள்ளனர். மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளை ஓஎம்ஆர் சாலையுடன் இணைக்கும் சாலைகள் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக ஓஎம்ஆர் சாலையை ஒட்டிய பகுதிகள் முதலீட்டாளர்களுக்கு சிறந்த பலனை வழங்கி வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை சுற்று வட்டாரப் பகுதிகள் நிலம், வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது. இந்த சாலைகளில் போக்குவரத்தை சுலபமானதாக ஆக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது. மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கினால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.