Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் 11 கி.மீ.,க்கு சர்வதேச தரத்தில் ரோடு: திட்ட அறிக்கை தயாரிக்க அழைப்பு

Print PDF

தினமலர்            30.10.2013

கோவையில் 11 கி.மீ.,க்கு சர்வதேச தரத்தில் ரோடு: திட்ட அறிக்கை தயாரிக்க அழைப்பு

கோவை : கோவையில் எட்டு ரோடுகளில், 11 கி.மீ.,க்கு, சர்வதேச தரத்தில் ரோடு அமைக்க மாநகராட்சி முடிவு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கட்டட கலை வல்லுனர்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளது.

கோவை மாநகராட்சியில், சர்வதேச தரத்தில் ரோடு அமைக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் பனீந்தர் ரெட்டி, அறிவுறுத்தியுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், கோவையில் நேர்கோடாக உள்ள ரோடுகளில், குறிப்பிட்ட தொலைவுக்கு சர்வதேச தரத்தில் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, வார்டு எண் 50ல் ராஜூ ரோடு; ஆர்.எஸ்.புரம் வார்டு எண் 23, 24க்கு உட்பட்ட திவான்பகதூர் ரோடு; வார்டு எண் 51ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோடு; வார்டு எண் 52, 53க்கு உட்பட்ட சின்னசாமி ரோடு; வார்டு எண் 22ல் அழகேசன் ரோடு; வார்டு எண் 71ல் காமராஜர் ரோடு; வார்டு எண் 55ல் பாலசுந்தரம் ரோடு; வார்டு எண் 53ல் வி.கே.கே.மேனன் ரோடு ஆகிய எட்டு ரோடுகளில், மொத்தம் 11 கி.மீ.,க்கு சர்வதேச தரத்தில் ரோடு அமைக்க மாமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதான சாலைகளுக்கு, சர்வதேச தரத்துடன் மாதிரி ரோடுகள் அமைக்க கள ஆய்வு செய்து, வடிவமைப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கட்டட கலை வல்லுனர்களிடம் இருந்து, விருப்பக் கேட்பு அறிக்கை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்துடன் அமைக்கப்படும் ரோடுகளில், கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள், பாதசாரிகளுக்கு தனித்தனியாக வழித்தடம் ஒதுக்கப்படும். சென்டர் மீடியன், ரோட்டோரத்தில் சமையல் காஸ், மின் கேபிள், தொலைத்தொடர்புக்கான கேபிள், குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்படும்.

இந்த வசதிகளுடன் ஒரு கி.மீ.,க்கு சர்வதேச தரத்துடன் ரோடு அமைக்க 15 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் 11 கி.மீ.,க்கு முதற்கட்டமாக சர்வதேச தரத்தில் ரோடு அமைக்கவும், இதற்கான நிதியை அரசிடம் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.