Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 50 லட்சத்தில் சாலைகள் சீரமைப்பு தொடக்கம்

Print PDF

தினமணி 30.11.2009

ரூ. 50 லட்சத்தில் சாலைகள் சீரமைப்பு தொடக்கம்

நாகர்கோவில், நவ.29: நாகர்கோவிலில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

÷நாகர்கோவிலில் அண்மையில் பெய்த பலத்த மழையால் முக்கிய சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தன.

÷நகரின் முக்கிய பகுதிகளான கேப்ரோடு, மீனாட்சிபுரம், செட்டிகுளம், கோட்டார், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை உள்ளிட்ட சாலைகள் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறியுள்ளன.

÷இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கைவிடுத்து, போராட்டங்களையும் நடத்தியுள்ளன.

÷இதையடுத்து நகராட்சி சாலைகளை சீரமைக்க நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை சீரமைப்புப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

÷நாகரகோவில் மணிமேடை சந்திப்பில் இருந்து மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை செல்லும் சாலை சீரமைப்பு பணிகளை நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன் சனிக்கிழமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

÷நகர்மன்ற உறுப்பினர் ராம்மோகன், காங்கிரஸ் பிரமுகர் கிளிட்டஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

÷நகராட்சியிலுள்ள 51 வார்டுகளிலும் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் சேதமடைந்துள்ள மழை நீர் ஓடைகளும், பிரதான சாலைகளும் சீரமைக்கப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.