Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போக்குவரத்து வசதிக்காக மாநகராட்சி கடைகள் இடிப்பு

Print PDF

தினமலர் 23.12.2009

போக்குவரத்து வசதிக்காக மாநகராட்சி கடைகள் இடிப்பு

திருப்பூர்:திருப்பூர், பல்லடம் ரோட்டில் சந்தைப் பேட்டைக்கு முன் பகுதி யில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில், உழவர் சந்தை ரோட்டை ஒட்டியுள்ள இரு கடைகள், நேற்று இடிக்கப்பட்டு, அவ் வழியாக வாகனங்கள் திரும்ப வசதியாக, ரோடு அகலப்படுத்தப்பட்டது.திருப்பூரில், பல்லடம் ரோட்டை ஒட்டிய உழ வர் சந்தை ரோட்டில் செல்லும் மினி பஸ்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் ஏ.பி.டி., ரோடு வழியாக, கருவம் பாளையம் பகுதியை சென்றடைகின்றன. அதேபோல், கருவம் பாளையம் பகுதியில் இருந்து பல்லடம் ரோட் டுக்கு, அவ்வழியாக வாகனங்கள் செல்கின் றன. அதனால், உழவர் சந்தை ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகளவில் காணப் படுகிறது. அந்த ரோடு, பல்ல டம் ரோட்டில் இணை யும் இடத்தில், வாகனங் கள் திரும்ப சிரமமான நிலை காணப்பட்டது.

அதனால், உழவர் சந்தை ரோடு முன் பகுதி யில், மாநகராட்சி சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் உள்ள இரு கடைகளை அகற்றினால், வாக னங்கள் திரும்ப வசதி யாக இருக்கும் என மாநகராட்சி நிர்வாகம் கருதியது; உடனே, அவ்விரு கடைகளை யும் இடித்து, அப்புறப் படுத்த நடவடிக்கை எடுத்தது. அதன்படி, சந்தைப் பேட்டை வணிக வளாக கட்டடத்தில் வடபுறம், உழவர் சந்தை ரோட்டை ஒட்டியிருந்த இரு கடைகள் நேற்று இடிக்கப்பட்டன. மாநக ராட்சி உதவி செயற் பொறியாளர் கண்ணன் மேற்பார்வையில், அக் கடைகள் இடிக்கப்பட் டன. அந்த ரோட்டின் முன் பகுதி அகலப்படுத் தப்பட்டதால், அவ்வழி யாக வாகனங்கள் திரும்ப வசதி ஏற்பட் டுள்ளது.