Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிவகங்கை நகராட்சி 27 வது வார்டில் 'பளிச்' ரோடுகள்

Print PDF

தினமலர் 24.12.2009

சிவகங்கை நகராட்சி 27 வது வார்டில் 'பளிச்' ரோடுகள்

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி 27 வது வார்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து "பளிச்' ரோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நகரில் நத்தை வேக பதாள சாக்கடை பணியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தெரு, ரோடுகளில் நடக்கவே முடியாத அளவிற்கு குழிகள் மக்களை வதைக்கின்றன. ஆனால் பின் தங்கிய பகுதியான 27 வார்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து ரோடு புதுப்பிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

கவுன்சிலர் ஆனந்தி (தி.மு..,) கூறியதாவது: தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளில் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. குடிசை பகுதி மேம்பாடு திட்டத்தில் 40 பயனாளிகளுக்கு தலா 80 ஆயிரம் ரூபாயில் (மானியம்) புது வீடுகள் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளன. புதிதாக 40 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சோடியம் விளக்குகள், ஒரு ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவச "டிவி' இந்த வார்டில் மட்டுமே கொடுத்துள்ளோம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் காஸ் அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி நிரந்தர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு புது ரேஷன் கார்டு, முதியோர், விதவை உதவி தொகை, மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி, கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் என உதவிகளை செய்து வருகிறேன். மூன்று லட்ச ரூபாயில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது. சமுதாய கூடம், ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம், நூலகம், பூங்கா உள்ளிட்ட பணிகளுக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என்றார். இங்கு குடியிருக்கும் லட்சுமி கூறுகையில், ""கட்சி பேதமின்றி அனைவருக்கும் இலவச "டிவி', காஸ் அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் திட்டத்தில் பாரபட்சமின்றி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், '' என்றார

Last Updated on Thursday, 24 December 2009 09:41