Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிமென்ட் சாலை அமைக்க பூஜை

Print PDF

தினமணி 07.01.2010

சிமென்ட் சாலை அமைக்க பூஜை

புதுச்சேரி, ஜன.6: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் இத் தொகுதி எம்எல்ஏ எஸ்.பி. சிவக்குமார் கலந்து கொண்டார்.

பாரதி வீதி- லூயிபிரகாசம் வீதியில் ரூ.10.5 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. செயின்ட்தெரேஸ் வீதி-மிஷன் வீதியில் ரூ.12.7 லட்சம் செலவில் சாலை அமைக்கப்படுகிறது.

பிரான்சுவா மார்த்தேன் வீதி- தெபேசான் தி ரீச்மோன்ட் வீதி ரூ.12.2 லட்சம் செலவில் சாலை அமைக்கப்படுகிறது. நகராட்சி கவுன்சிலர்கள் ராஜன், பிரான்சினா ரமணி, இந்திரா சோமானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 07 January 2010 10:59