Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அவிநாசி ரோட்டில் நவீன நடைபாதை தெற்கு மண்டல கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 12.01.2010

அவிநாசி ரோட்டில் நவீன நடைபாதை தெற்கு மண்டல கூட்டத்தில் முடிவு

கோவை: கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி , அவிநாசி ரோட்டில் 50 லட்ச ரூபாய் செலவில் நவீன நடைபாதை அமைக்க தெற்கு மண்டல கூட்டத்தில் முடிவானது.மாநகராட்சி தெற்கு மண்டல கூட்டத்தில் தலைவர் பைந்தமிழ் பாரி தலைமையில்நடந்தது.கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு, பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அவிநாசி ரோட்டின் இருபுறமும் 50 லட்ச ரூபாய் செலவில் நவீன நடைபாதை அமைக்கப்பட உள்ளது.அண்ணாசிலை, எல்..சி., உப்பிலிபாளையம், நஞ்சப்பாரோடு சந்திப்புகளை ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ..சி., மைதானத்தின் முகப்பு தோற்றம் 48 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்படும். புரூக்பாண்ட் ரோட்டில் 75 லட்ச ரூபாய் செலவில் இருபுறமும் நடைபாதைகளும், 40 லட் ச ரூபாய் செலவில் மில்ரோட்டில் நடைபாதை அமைக்கப்படும்.உக்கடத்திலிருந்து செல்லும் சுண்டக்காமுத்தூர் ரோடு, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தார்ரோடு அமைத்து புதுப்பிக்க ஒரு கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பிரதானசாலை மேம்பாட்டிற்கு நான்கு கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.கூட்டத்தில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உதவி கமிஷனர் லட்சுமணன், சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து, நியமனக்குழு தலைவர் ராஜேந்திரன், கணக்கு குழு தலைவர் தமிழ்செல்வி, நகரமைப்புக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 12 January 2010 07:20